டிகிரி முடித்திருந்தால் போதும்... இண்டிகோ ஏர்லைன்ஸில் வேலை வாய்ப்பு

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 15, 2022, 07:40 PM IST
  • இண்டிகோ ஏர்லைன்ஸில் வேலை வாய்ப்பு
  • ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்
  • அக்டோபர் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
 டிகிரி முடித்திருந்தால் போதும்... இண்டிகோ ஏர்லைன்ஸில் வேலை வாய்ப்பு title=

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் Officer – Customer Service/ Ramp/ Security பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பப்பட இருக்கின்றன.  இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலிப் பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Officer – Customer Service/ Ramp/ Security பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள்வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல்

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களே உஷார்!! இந்த கட்டணங்களை உயர்த்தியது வங்கி

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு Bill-ஐ Google Pay மூலம் செலுத்தலாம்; ஈஸியான வழிமுறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News