சென்னை கார்ப்பரேஷனில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

சென்னை பெருநகர மாநகராட்சியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 20, 2022, 12:31 PM IST
  • சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு
  • 42 காலி பணியிடங்கள் இருக்கின்றன
  • நவம்பர் 30ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்
சென்னை கார்ப்பரேஷனில் வேலை வாய்ப்பு - முழு விவரம் title=

தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ், கிரேட்டர் சென்னை மாநகராட்சியில் இருந்து Obstetrician & Gynecologist, Pediatrician, Surgeon மற்றும் General Medicine பணிக்கான வேலை வாய்ப்பு  அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின்படி, 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.

காலிப்பணியிடங்கள்:

Obstetrician & Gynecologist – 10 பணியிடங்கள்

Pediatrician – 7 பணியிடங்கள்

Surgeon – 12 பணியிடங்கள்

General Medicine – 13 பணியிடங்கள் என மொத்தம் 42 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் MBBS/ MD/ MS/ DGO/ DCH முடித்திருக்க வேண்டும்.

Obstetrician & Gynecologist – MBBS/ MD/ DGO

Pediatrician – MBBS/ MD/ DCH

Surgeon – MBBS/ MS

General Medicine – MBBS/ MD

சம்பள விவரம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.90,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA/DA செலுத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், உறுப்பினர் செயலாளர், சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கம் பொது சுகாதாரத் துறை, ரிப்பன் கட்டிடங்கள், சென்னை – 600003 என்ற முகவரிக்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | வங்கி Cheque புக் அடிக்கடி பயன்படுத்துவீர்களா? புதிய விதிகள் அமல்!

மேலும் படிக்க | TNPSC: 731 கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

மேலும் படிக்க | நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News