ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 7, 2022, 04:17 PM IST
  • ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
  • பல்வேறு பணிகளுக்கு காலி பணியிடங்கள்
  • விண்ணப்பிப்பதற்கு அக்டோபர் 16ஆம் தேதி கடைசி நாளாகும்
 ஏர் இந்தியாவில் வேலை வாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள் title=

ஏர் இந்தியா நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள CRM Professionals பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி CRM Solutions Architect/ CRM Platform Admin/ CRM Developer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி, VDA உயர்ந்தது

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அக்டோபர் 16ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.

மேலும் படிக்க | எல்லையோர ஆயுதப் படைகளில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலி! இப்படி விண்ணப்பிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News