கர்நாடகா வங்கியில், வங்கிப் பணிக்கான காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவிருக்கிறது. வங்கியின் எழுத்தர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
2022 மே 10, 2022 அன்று கர்நாடக வங்கி பல பணிகளுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 21, 2022. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கர்நாடகா வங்கி எழுத்தர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: www.karnatakabank.com. இந்த ஆட்சேர்ப்பு இயக்ககத்தின் கீழ் உள்ள காலியிடங்களின் சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
"யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் (முதல் வகுப்பு)*/ அதற்கு இணையான கிரேடுகளுடன் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எந்தத் துறை பட்டதாரிகளாகவும் இருக்கலாம்” என்று அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 1044 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
கர்நாடகா வங்கி கிளார்க் ஆட்சேர்ப்பு 2022: நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
பதிவுகள் தொடங்கும் நாள்: மே 10, 2022
பதிவுகள் முடிவடையும்: மே 21, 2022
விண்ணப்பிக்கும் காலக்கெடு: மே 10 முதல் மே 21, 2022 வரை
ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மே 21, 2022.
விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுப்பதற்கான கடைசி தேதி ஜூன் 5, 2022 ஆகும்.
ஜூன் 2022 இல் ஆன்லைன் தேர்வு
கர்நாடகா வங்கி கிளார்க் ஆட்சேர்ப்பு 2022: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கர்நாடகா வங்கி கிளார்க் ஆட்சேர்ப்பு 2022: தேர்வு செயல்முறை
ஆன்லைன் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தம் 135 நிமிடங்கள் நடைபெறும் இந்தத் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கிலம், பகுத்தறிவு, கணினி அறிவு, பொது விழிப்புணர்வு மற்றும் எண் திறன் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இருக்கும்.
கர்நாடகா வங்கி கிளார்க் ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பிப்பதற்கான படிகள்
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் - www.karnatakabank.com
படி 2: இணையதளத்தில், ஆட்சேர்ப்பு பிரிவுக்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள எழுத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு தொடர்புடைய அறிவிப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: ஆன்லைன் விண்ணப்பப் படிவ இணைப்பைத் தேர்ந்தெடுத்து 'புதிய பதிவு' என்பதைக் கிளிக் செய்யவும்
படி 4: உள்நுழைந்து பொருத்தமான விவரங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்
படி 5: தேவையான ஆவணங்களைப் பதிவேற்றிய பிறகு, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
படி 6: கர்நாடக வங்கி எழுத்தர் பணிக்கான விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்படும்.
படி 7: படிவத்தைப் பதிவிறக்கி, எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR