டிவி, பிரிட்ஜை சுத்தம் செய்ய போறீங்களா... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்!

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பொதுவாக பலர் வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் சுத்தம் செய்ய கிளம்பி விடுவார்கள். பண்டிகை நாட்களில் விருந்தினர்கள் வருவதாலும், மேலும் நல்ல நாட்களில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாலும், சுத்தம் செய்வது என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 11, 2023, 05:20 PM IST
  • வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்யும் போது நான் கவனத்தில் வைக்கக் கூடிய சில விஷயங்கள்.
  • தொலைக்காட்சியை சுத்தம் செய்யும் போது, டிவி ஸ்கிரீன் மீது நேரடியாக கடைகளில் விற்கும் கிளீனிங் திரவங்களை ஸ்பிரே செய்யக்கூடாது.
  • ஃப்ரிட்ஜ் சுத்தம் செய்ய ஈரம் ஆக்கப்பட்ட மென்மையான துணியை பயன்படுத்தலாம்.
டிவி, பிரிட்ஜை சுத்தம் செய்ய போறீங்களா... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்! title=

தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பொதுவாக பலர் வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் சுத்தம் செய்ய கிளம்பி விடுவார்கள். பண்டிகை நாட்களில் விருந்தினர்கள் வருவதாலும், மேலும் நல்ல நாட்களில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாலும், சுத்தம் செய்வது என்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. இந்நிலையில், வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்யும் போது நான் கவனத்தில் வைக்கக் கூடிய சில விஷயங்களை குறித்து அறிந்து கொள்ளலாம். குறிப்பாக மின்னணு சாதனங்கள், மின்சார சாதனங்கள் போன்றவற்றை சுத்தம் செய்யும் போது, கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். இல்லையென்றால், சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில், வீட்டு உபயோக சாமான்களை பழுதாக்கி விட்டு, பண்டிகை நாளில், வீட்டில் உள்ளவர்களிடம் திட்டு வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடலாம். அதோடு செலவும் அதிகரிக்கலாம். இது போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க மின்சாதனங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.

டிவி

டிவி என்னும் தொலைக்காட்சியை சுத்தம் செய்யும் போது எப்போதும் மைக்ரோ பைபர் துணியினால் துடைக்க வேண்டும். மிகச் சிறிதளவு தண்ணீரில் நனைக்கப்பட்ட மென்மையான துணியையும் பயன்படுத்தலாம். ஆனால் அதிக ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். டிவியை சுத்தம் செய்யும் போது டிவி ஸ்கிரீன் மீது நேரடியாக கடைகளில் விற்கும் கிளீனிங் திரவங்களையோ அல்லது தண்ணீரையோ ஸ்பிரே செய்யக்கூடாது. அதோடு சுத்தம் செய்வதற்கு முன்னால் டிவியின் மின் இணைப்பை துண்டித்து இருக்க வேண்டும்.

பிரிட்ஜ்

டிவி போலவே பிரிட்ஜ் சுத்தம் செய்யும்போதும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஃப்ரிட்ஜ் சுத்தம் செய்ய ஈரமாக்கப்பட்ட மென்மையான துணியை பயன்படுத்தலாம். எனினும் அளவுக்கு அதிகமான ஈரம் கூடாது. மென்மையான சோப்பு கலந்த திரவத்தை பயன்படுத்தலாம். சுத்தம் செய்யத் தொடங்கும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். அதோடு, பிரிட்ஜில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து வைத்து, ஒவ்வொரு ட்ரேயாக சுத்தம் செய்வது சிறந்தது. சுத்தம் செய்யும்போது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்க்ரப்பர் பயன்படுத்தக் கூடாது.
அதே போன்று மின் இணைப்பு துண்டிக்காமல் சுத்தம் செய்வதும் ஆபத்து.

சிம்னி

சிம்மியை சுத்தம் செய்யும் போதும் முதலில் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். அதில் உள்ள பில்டர்களை சுத்தம் செய்யும் போது, எலுமிச்சம் பழச்சாறு கலந்த திரவத்தில் சிறிது நேரம் ஊற வைத்து சுத்தம் செய்வது நல்லது. சுடுநீரை பயன்படுத்துவது சுத்தம் செய்வது எளிதாக்கும். பின்னர் அதனை நன்றாக துடைத்து காயவைத்து பின்னர் மீண்டும்  பொருத்த வேண்டும். சுத்தம் செய்யும்போது, சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் திரவங்களை சிம்னியின் உள் பாகங்களில் தெளிக்க கூடாது. நாமாக அதன் பாகங்களை கழற்றி சுத்தம் செய்ய முயற்சிக்கக் கூடாது. எப்போதும் சினி தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனரை அனைத்து மட்டுமே அதனை சுத்தம் செய்வது நல்லது.

மிக்ஸி கிரைண்டர்

மிக்ஸி கிரைண்டரை சுத்தம் செய்யும்போது, கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் அதில் பிளேடுகள் ஜார்கள், வாஷர் என பல்வேறு பாகங்கள் உள்ளன. ஜார்களையும் பிளேடுகளையும் சமையல் பாத்திரங்களை சுத்தம் செய்வது போல் சுத்தம் செய்யலாம்.  ஆனாலும் அதன் கீழ் புஷ் உள்ள பாகத்தில் தண்ணீர் படாமல் இருப்பது நல்லது. கிரைண்டர் மிக்ஸியின் மேல் புற பாகங்களை மென்மையான சோப்பு கலந்த நீரில் நினைத்த துணி கொண்டு சுத்தம் செய்யலாம். எனினும் முதலில் மின் இணைப்பை கண்டித்த பிறகு சுத்தம் செய்யும் வேலையை தொடங்க வேண்டும்.

ஹோம் தியேட்டர் மற்றும் ஸ்பீக்கர்

ஹோம் தியேட்டர் மற்றும் ஸ்பீக்கர்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. சுத்தம் செய்யும் திரவம், மைக்ரோ பைபர் துணி, தூசுகளை நீக்க மென்மையான துணி ஆகியவை இருந்தால் போதும். முதலில் தூசுகளை நீக்கிவிட்டு, பின்னர் கிளீனிங் திரவத்தில் நனைக்கப்பட்ட மென்மையான துணியை பயன்படுத்தலாம். எனினும் கூடுதல் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு, ஸ்பீக்கர் மற்றும் ஹோம் தியேட்டர்களில் நேரடியாக திரவங்களை ஸ்பிரே செய்யக்கூடாது. இவை அனைத்தையும் செய்ய முன் முதலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | NPS முக்கிய அப்டேட்: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்!!

மின்விசிறி

மின்விசிறியை சுத்தம் செய்யும்போது முதலில் மின் இணைப்பை துண்டித்து விட்டு, ஏணியை பயன்படுத்தி மேலே ஏறொ நின்று கொண்டு, கிளீனிங் திரவத்தில் நினைத்த துணியைக் கொண்டு சுத்தம் செய்யலாம். எனினும் நேரடியாக தண்ணீரை அதில் ஸ்பிரே செய்யக்கூடாது. அதோடு தீவிரமான கெமிக்கல்களையும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இது மின்விசிறியின் பளபளப்பை மங்கச் செய்யலாம்.

மின் விளக்குகள்

மீன் விளக்குகளை சுத்தம் செய்யும்போது, முதலில் மின் இணைப்பை துண்டித்து விட்டு, அதன் சூடு ஆறும் வரை காத்திருக்க வேண்டும். பின்னர் சிறிது ஈரமான துணி கொண்டு சுத்தம் செய்யலாம். எனினும் தண்ணீர் அல்லது கிளீனிங் திரவத்தை நேரடியாக ஸ்பேஸ் செய்யக் கூடாது. கெமிக்கல்களையும் பயன்படுத்தக் கூடாது. முழுமையாக காயும் முன் அதனை ஆன் செய்ய கூடாது.

மைக்ரோவேவ்

மைக்ரோவேவ் சுத்தம் செய்யும் போது மென்மையான சோப்பு நீரில் நனைக்கப்பட்ட ஈரத்துணி போதுமானது. எனினும் சுத்தம் செய்யும் திரவத்தை நேரடியாக ஸ்பிரே செய்யக்கூடாது. அதே போன்று ஸ்டெயின்லெஸ் கிரீல்ஸ் ஸ்க்ரபரையும் பயன்படுத்தக் கூடாது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். முழுமையாக காய்ந்த பின்பே பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க | EPF கணக்கில் வட்டி: தீபாவளி பரிசாக வருகிறதா பம்பர் தொகை? அதிரடி அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News