உங்கள் காதல் முறிவை நோக்கி செல்கிறதா...? 5 அறிகுறியின் மூலம் தெரிந்துக்கொள்வோம்!

திருமணத்திற்கு பின்பும் உங்கள் காதல் நீடிக்கிறதா? உங்கள் திருமண வாழ்வு இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?... இதை எப்படி தெரிந்துக்கொள்வது?

Last Updated : Mar 25, 2020, 11:46 PM IST
உங்கள் காதல் முறிவை நோக்கி செல்கிறதா...? 5 அறிகுறியின் மூலம் தெரிந்துக்கொள்வோம்! title=

திருமணத்திற்கு பின்பும் உங்கள் காதல் நீடிக்கிறதா? உங்கள் திருமண வாழ்வு இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும்?... இதை எப்படி தெரிந்துக்கொள்வது?

காதலிக்கும் காலத்தில் உள்ள அன்பு திருமணத்திற்கு பின்பு நீடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுவது தற்போதைய காலக்கட்டத்தில் இயல்பாகிவிட்டது. ஆனால் காரணம் மட்டும் ஏன் என்று இதுவரை நாம் அறியவில்லை. இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு சிறிய சுயசோதனைக்கான வழியை நாம் இங்கு உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள இருக்கிறோம்.

உங்கள் வாழ்க்கை துணையுடன் உங்கள் உறவு நீண்ட காலம் நீடிக்குமா இல்லையா என்பதைக் குறிக்கும் இந்த ஐந்து அறிகுறிகளை நீங்கள் இந்த நேரத்தில் அறிந்துக்கொள்ள வேண்டும்.

  • உணர்ச்சி பிணைப்பின் பற்றாக்குறை - உங்கள் துணை இஉங்களை நேசிக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் காட்ட முயன்றாலும், அவர் உங்களை உணர்ச்சி ரீதியாக இணைத்துக் கொள்ளவில்லை எனில், இந்த உறவின் எதிர்காலம் முடிவடையும் விளிம்பில் உள்ளது என்று அர்த்தம்.
  • கடந்த காலத்தை மறக்க முடியாத நிலை - ஒருவரின் மனமுறிவு அவருடை விருப்பத்திற்கு எதிராக அவரை செயல்பட தூண்டும். அத்தகைய சூழ்நிலையில், அந்த கடந்த காலத்திலிருந்து தன்னை மீட்டு வருவது மிகவும் கடினம். ஆனால் உங்களுடன் நீண்ட காலத்திற்குப் பிறகும் உங்கள் துணை உங்கள் கடந்த கால நினைவுகளிலிருந்து வெளியே வரவில்லை என்றால், அத்தகைய உறவுக்கு எந்த அர்த்தமும் இல்லை. அத்தகைய உறவை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவது நல்லது.
  • உறவில் இடைவெளி உணர்ந்தால் - ஒரு சுருக்கமான கலந்துரையாடலுக்குப் பிறகும் உங்கள் துணை உங்களிடம் சிறிது நேரம் இடைவெளி கேட்டால், இந்த வகையான சைகை புரிந்து கொள்ளப்பட வேண்டும். 
  • பாதுகாவலரைச் சந்திக்கும் விஷயம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது - நீங்கள் இருவரும் பல ஆண்டுகளாக ஒரு அழகான உறவைக் கொண்டிருக்கிறீர்கள், ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளீர்கள். ஆனால் பெற்றோரை பார்க்கும் போது உங்கள் துணை உங்களிடமிருந்து நேரம் கேட்கத் தொடங்குகிறார் எனில் இந்த விஷயத்தை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இதுவும் உங்கள் உறவு முறிவுக்கான அறிகுறியாக இருக்கலாம்.
  • தனிப்பட்ட இடத்திற்கான தேவை- காதலித்த போதிலும், ஒருவர் தனது தனிப்பட்ட சுதந்திரத்தை இழக்கக் கூடாது, சில தனிப்பட்ட இடங்களும் தனக்கு இருக்க வேண்டும் விரும்புகிறார் என வைத்துக்கொள்வோம். அப்படியாப்பட்ட உறவில் ஒரு ஆரோக்கியமான புரிதல் இருப்பது கடினம். மேலும் இந்த உறவும் விரைவில் முறிவதற்கான விளிம்பில் உள்ளது எனவும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

Trending News