தீபாவளியின் போது வாங்கக்கூடாத பொருட்கள் என்னென்ன தெரியுமா?

தீபாவளியின் போது தன்தேரசில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக புதிய பாத்திரங்கள் மற்றும் தங்கத்தை வாங்குவது வழக்கம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2020, 02:26 PM IST
  • தீபாவளியில் இயற்கை உலோகங்கள் மட்டுமே வாங்க வேண்டும்.
  • பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள் இன்று அதிர்ஷ்டமின்மையைக் கொண்டு வரும்.
  • எண்ணெய், நெய் போன்றவற்றையும் பொதுவாகவே பண்டிகை நாட்களில் வாங்குவது கெடுதலை விளைவிக்கும்.
தீபாவளியின் போது வாங்கக்கூடாத பொருட்கள் என்னென்ன தெரியுமா?  title=

புதுடில்லி: நமது நாட்டின் மிக முக்கிய பண்டிகைகளில் தீபாவளி ஒன்றாகும். பல்வெறு மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாளும் அதற்கு முந்தைய நாளும் கூட பல பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. வட மாநிலங்களில் தீபாவளிக்கு (Deepavali) முந்தைய நாள் தனத்ரோதஷி அதாவது தன்வந்தரி த்ரயோதாஷி என்றும் தன்தேரஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, தன்தேரஸ் பண்டிகை நவம்பர் 13 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில், மக்கள் தங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருக புதிய பாத்திரங்கள் மற்றும் தங்கத்தை வாங்குவது வழக்கம். இன்று வாங்கப்படும் அனைத்து பொருட்களும் செல்வத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தன் என்ற சொல் செல்வத்தை குறிக்கிறது. இந்துக்கள் செல்வத்தின் தெய்வங்களாக லட்சுமி தேவி (Goddess Lakshmi) மற்றும் குபேரரை வணங்குகிறார்கள்.

ALSO READ: Cheapest rate-ல் தீபாவளியில் தங்கம் வாங்க வேண்டுமா? இப்படி வாங்கலாம்….

எதை வாங்கக் கூடாது:

தன்தேரஸ் மற்றும் தீபாவளியில் என்னென்ன வாங்கலாம் என பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால், ஜோதிடர்களின் படி, சில பொருட்களை வாங்கினால், நம் வாழ்க்கையில் பல எதிர்மறை விளைவுகள் ஏற்படக்கூடும். அப்படிப்பட்ட பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்வதும் நல்லதாகும்.

-தீபாவளியில் பலர் வீட்டிற்கு ஸ்டீல் பாத்திரங்களை வாங்குகிறார்கள். எஃகு உலோகம் அல்ல, இதில் ராகு அதிக செல்வாக்கு செலுத்துகிறார். எனவே இதை தவிர்க்க வேண்டும். இயற்கை உலோகங்கள் மட்டுமே வாங்க வேண்டும். அலுமினியத்தால் செய்யப்பட்ட எந்தவொரு பொருட்களும் துரதிர்ஷ்டவசமாக கருதப்படுவதால், அலுமினிய பொருட்களை எந்த காரணத்திற்காகவும் பண்டிகைகளின் போது வாங்கக்கூடாது.

-தீபாவளியின் போது எந்த கூர்மையான பொருட்களையும் வாங்குவது நல்லதாக கருதப்படுவதில்லை. எனவே கத்தி, கத்தரிக்கோல் அல்லது வேறு எந்த கூர்மையான ஆயுதத்தையும் தீபாவளி ஷாப்பிங்கில் வாங்க வேண்டாம்.

-பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள் இன்று அதிர்ஷ்டமின்மையைக் கொண்டு வருவதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

-தீபாவளியின் போது எந்தவிதமான கறுப்புப் பொருட்களையும் வீட்டிற்கு வாங்கி கொண்டு வர வேண்டாம்.

-ஜோதிடர்களின் கூற்றுப்படி, தீபாவளியில் வாங்கப்படும் கருப்பு துரதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது.

-எண்ணெய், நெய் போன்றவற்றையும் பொதுவாகவே பண்டிகை நாட்களில் வாங்குவது கெடுதலை விளைவிக்கும். முன்னரே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

மேலுள்ள பொருட்களை உங்கள் தீபாவளி ஷாப்பிங்கில் தவிர்த்து, உங்கள் வீட்டிற்கு செல்வத்தையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வாருங்கள். 

ALSO READ: தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News