LPG Gas Cylinder: கேஸ் கனெக்ஷன் பற்றிய இந்த முக்கியமான rules உங்களுக்குத் தெரியுமா?

கேஸ் ஏஜென்சியின் கோடவுனில் இருந்து சிலிண்டரை நீங்களே எடுத்து வந்தால், ஏஜென்சியிலிருந்து நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை கேட்டு பெற்றுக்கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 18, 2020, 04:21 PM IST
  • சிலிண்டரைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்களுக்கு அதன் விதிகளைப் பற்றி தெரிவதில்லை.
  • ரெகுலேட்டர் பற்றிய முக்கிய விதிகளை நீங்கள் அறிவது அவசியம்.
  • ரெகுலேட்டர் சேதமடைந்தால், ஏஜென்சி அதை மாற்றிக்கொடுக்கும்.
LPG Gas Cylinder: கேஸ் கனெக்ஷன் பற்றிய இந்த முக்கியமான rules உங்களுக்குத் தெரியுமா? title=

LPG Gas Cylinder-கள் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் ஒரு இன்றியமையாத விஷயமாகும். அரசின் உஜ்வலா திட்டத்தில், அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், சிலிண்டரைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்களுக்கு அதன் விதிகளைப் பற்றி தெரிவதில்லை. அப்படி மிகவும் அறியப்படாத விதிகளில் ஒன்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கேஸ் ஏஜன்சி உங்களுக்கு கேஸ் சிலிண்டரை வீட்டுக்கு வந்து விநியோகிக்கவில்லை என்றால், சிலிண்டரைப் பெற நீங்கள் ஏஜென்சி கோடவுனுக்குச் செல்ல வேண்டி இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அந்த எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு நிலையான தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதற்கு எந்த எரிவாயு நிறுவனமும் உங்களுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாது.

இது என்ன விதி?

நீங்கள் எந்த நிறுவனத்துடன் LPG Gas Cylinder-ருக்கான தொடர்பு வைத்திருக்கிறீர்களோ, அந்த நிறுவனத்தின் கோடவுனில் இருந்து சிலிண்டரை நீங்களே எடுத்து வந்தால், ஏஜென்சியிலிருந்து 19 ரூபாய் 50 பைசாவை நீங்கள் பெறலாம். எந்தவொரு நிறுவனமும் இந்த தொகையை கொடுக்க மறுக்க முடியாது. இந்த தொகை உங்களிடமிருந்து விநியோக கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த தொகை அனைத்து நிறுவனங்களின் சிலிண்டர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த தொகை ஒரு மாதத்திற்கு முன்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டெலிவரி கட்டணம் 15 ரூபாயாக இருந்தது. இப்போது அது 19 ரூபாய் 50 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏஜன்சிகள் மறுத்தால் இங்கே புகார் செய்யுங்கள்

கேஸ் ஏஜென்சி (Gas Agency) ஆபரேட்டர் இந்த தொகையை உங்களுக்கு வழங்க மறுத்தால், நீங்கள் கட்டணமில்லா எண்ணான 18002333555 இல் புகார் செய்யலாம். தற்போது, ​​வாடிக்கையாளர்களுக்கு எல்பிஜி மானிய சிலிண்டருடன் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஒதுக்கீட்டை முடித்த பிறகு, நீங்கள் சந்தை விகிதத்தில் சிலிண்டர்களை வாங்க வேண்டும்.

ALSO READ: இதை செய்தால் LPG சிலிண்டர் ஏஜென்சி மாதம் மாதம் உங்களுக்கு பணம் வழங்கும்..!

ரெகுலேட்டரை இலவசமாக மாற்றலாம்

உங்கள் சிலிண்டர் ரெகுலேட்டரில் (எல்பிஜி ரெகுலேட்டர்) கசிவு இருந்தால், அதை நீங்கள் ஏஜென்சியிடம் இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். இதற்காக, உங்களிடம் ஏஜென்சி சந்தா வவுச்சர் இருக்க வேண்டும். கசிவுள்ள ரெகுலேடரை நீங்கள் உங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும். சப்ஸ்க்ரிப்ஷன் வவுச்சர் மற்றும் ரெகுலேட்டரின் எண் ஒன்றாக உள்ளதா என்பது சரிபார்க்கப்படும். இரண்டு எண்ணும் பொருந்தினால் ரெகுலேட்டர் மாற்றி கொடுக்கப்படும். இதற்கு நீங்கள் எந்த கட்டணமும் வழங்கத் தேவையில்லை.

ரெகுலேட்டர் சேதம் அடைந்தாலும் அதை மாற்றிக்கொள்ளலாம்

ஏதேனும் காரணத்தால் உங்கள் ரெகுலேட்டர் சேதமடைந்தால், ஏஜென்சி அதை மாற்றிக்கொடுக்கும். ஆனால் இதற்கு, ஏஜென்சி உங்களிடமிருந்து கட்டணம் பெறும். இந்த கட்டணம் 150 ரூபாய் வரை இருக்கும்.

ரெகுலேட்டர் திருடப்பட்டால் புதிய ரெகுலேட்டர் கிடைக்கும்

உங்கள் ரெகுலேட்டர் திருடப்பட்டு, நீங்கள் ஏஜென்சியிலிருந்து ஒரு புதிய ரெகுலேட்டரை வாங்க விரும்பினால், அதற்கு நீங்கள் முதலில் காவல் நிலையத்தில் (Police Station) FIR பதிவு செய்ய வேண்டும். எஃப்.ஐ.ஆர் (FIR) அறிக்கையின் நகலை சமர்ப்பித்த பின்னரே ஏஜன்சி ரெகுலேட்டரை கொடுக்கும்.

ALSO READ: LPG Cylinder Rates: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு... புதிய விலை என்ன?

ரெகுலேட்டர் எரிவாயுவின் அளவைப் பற்றி சொல்கிறது

நீங்கள் ரெகுலேட்டரை தொலைத்து விட்டால், ரூ .250 தொகையை டெபாசிட் செய்து ஏஜென்சியிடமிருந்து புதிய ரெகுலேட்டரை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர்களின் வசதிக்காக Multifunction gas regulator வந்துள்ளது. இது எவ்வளவு எரிவாயு மிச்சமுள்ளது என்பதைக் காட்டுகிறது. ரெகுலேட்டருக்கு ஆயுட்கால உத்தரவாதம் உள்ளது. ஆனால் உற்பத்தி சிக்கல்கள் இருந்தால் மட்டுமே ரெகுலேட்டர்கள் இலவசமாக மாற்றப்படுகின்றன. மற்ற சந்தர்பங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News