மே மாதத்தில் 4 கிரகங்களின் ராசி மாற்றம்; இவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

Zodiac Change in May 2022: இந்த மாதம் மே 10க்குப் பிறகு 4 பெரிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றப் போகின்றன. இதன் நேரடிப் பலன் 5 ராசிக்காரர்கள் மீது இருக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 4, 2022, 06:47 AM IST
  • புதிய வேலை கிடைக்கும்
  • 4 கிரகங்களின் ராசி மாற்றம்
  • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும்
மே மாதத்தில் 4 கிரகங்களின் ராசி மாற்றம்; இவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் title=

நட்சத்திரங்களின் அடிப்படையில் இந்த மாதம் சில ராசியினருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் 4 பெரிய கிரகங்கள் தனது ராசியை மாற்றப் போகிறார்கள். இது உங்கள் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த மாதம் 4 கிரகங்களின் ராசி மாற்றம்
இந்த மே மாதத்தில் சுக்கிரன், சூரியன், புதன் மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு கிரகங்கள் தனது ராசியை மாற்றப் போகிறார்கள். முதலில் மே 10 ஆம் தேதி, புதன் கிரகமும் சுக்கிரன் ஆளும் ரிஷபத்தில் பிற்போக்குத்தனமாக செல்கிறார். அதே நேரத்தில் சூரியன் 2022 மே 15 ஆம் தேதி தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்கு செல்கிறார். அதேபோன்று, கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஏற்கனவே கும்பம் ராசியில் பயணித்து வருகிறார். இதையடுத்து, தனது ராசியை மாற்றி மே 17ம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். அதேபோன்று, மே மாத இறுதியில் அதாவது மே 23 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த மே மாதத்தில் ஏற்படும் 4 கிரகங்களின் மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மே மாதம் சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள்: உங்க மகளுக்கு இந்த ராசியா? 

ரிஷபம்: வியாபாரத்தில் ஈடுபடும் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். இதனுடன், புதிய சொத்துகளையும் உருவாக்க முடியும். படிக்கும் மாணவர்களுக்கும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும், மேலும் அவர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், வெளியூரில் இருந்து திடீர் பணவரவும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு விஷயங்களிலும் ஆதாயம் பெறலாம். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது பணப் பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. கடந்த மாதம் வரை சிரமத்தை அதிகரித்து வந்த செவ்வாய் - சுக்கிரன் கிரகங்கள் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பு அருள் தருவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவையும் பெறுவீர்கள்.

துலாம்: இந்த மாதம் உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் திறக்கும். கூட்டாண்மையில் நல்ல வியாபாரம் செய்யலாம். வணிகம் செய்பவர்களுக்கும் பொருளாதார செழுமைக்கான வழிகள் திறக்கப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும், அவர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த மாதம் நல்ல செய்தி கிடைக்கும். ஏற்கனவே வேலை செய்பவர்கள் பெரிய பொறுப்பு அல்லது மரியாதையைப் பெறுவார்கள். அரசாங்க வேலை பெற முயற்சிப்பவர்களுக்கும் இந்த மாதம் அதிர்ஷ்டம் உண்டாகும்.

மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு மே 10க்குப் பிறகு வெற்றிக்கான பல கதவுகள் திறக்கப்படும். நீங்கள் வேலையில் நல்ல போனஸ் மற்றும் பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் சில பெரிய பொறுப்புகளையும் பெறலாம். சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News