Horoscope 2022: 2021 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாண்டு அதாவது 2022 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான ஆயத்தங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் அனைவருக்கும் உள்ளது. இந்த புத்தாண்டு தங்களுக்கு பல நல்ல செய்திகளை கொண்டு வர வேண்டும் என்ற ஆசையும் பலருக்கு உள்ளது.
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, சில ராசிக்காரர்களுக்கு (Zodiac Signs) 2022 ஆம் ஆண்டு மிகச்சிறப்பாக இருக்கும். குறிப்பாக, மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகக் சிறப்பாக இருக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு 2022 புத்தாண்டு நல்ல பலன்களைத் தரப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் புத்தாண்டில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் மாற்றம் ஏற்படும்.
ஏப்ரல் மாதம் வியாழன் மீன ராசியில் சஞ்சரிப்பதால் வருமானம் பெருகும், செல்வம் பெருகும். இது தவிர வியாபாரமும் விரிவடையும். 2022 மகர ராசிக்கு எந்தெந்த அம்சங்களில் சிறப்பானதாக இருக்கும் என்பதை இங்கே காணலாம்.
ALSO READ | ஏழரை சனியிலும் சனிபகவானின் அருளை பெற ‘இவற்றை’ செய்யுங்கள்..!!
மகர ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக புத்தாண்டு 2022 எப்படி இருக்கும்?
மகர (Capricorn) ராசிக்கரர்களுக்கு தொழில் ரீதியாக புத்தாண்டு சிறப்பாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான பயணங்களால் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். இந்த ராசிக்காரர்களிடம் இணைந்து செயல்படுபவர்களுக்கு ஆதரவு கிடைக்கும். கூட்டு முயற்சி பண இழப்பை ஏற்படுத்தலாம், ஆகையால் அதில் கவனம் தேவை.
2022-ல் மகர ராசிக்காரர்களின் நிதி நிலை எப்படி இருக்கும்?
பொருளாதாரக் கண்ணோட்டத்தில், புத்தாண்டு சிறப்பு வாய்ந்ததாக இருக்காது. பணம் செலவழிப்பதில் சிரமம் ஏற்படும். மேலும், ஊதாரித்தனத்தால் மன உளைச்சல் ஏற்படும். இருப்பினும், ஜூன் மாதத்திலிருந்து பொருளாதார நிலை வலுப்பெறத் தொடங்கும். மேலும், ஆண்டின் இறுதியில், நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும்.
2022-ல் மகர ராசியின் குடும்ப வாழ்க்கை எப்படி?
மகர ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை பல முன்னேற்றங்கள், குழப்பங்கள் என கலப்படமாக இருக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் தாயாருக்கு கஷ்டம் ஏற்படலாம். மேலும், குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக டென்ஷன் ஏற்படும். புதிய ஆண்டில் சில பெரிய சொத்துக்களில் நீங்கள் முதலீடு செய்யக்கூடும். குடும்பத்தில் ஆன்மீகப் பணிகளுக்காக பணம் செலவாகும்.
மகர ராசிக்காரர்களின் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?
புத்தாண்டு , காதல் வாழ்க்கைக்கு (Love Life) சாதகமான பலன்களுடன் வருகிறது. வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவழிப்பீர்கள். இது தவிர திருமண வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் நிலைமை சீராகும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | பொன்னாக ஜொலிக்கப் போகும் இந்த 5 ராசிக்காரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR