சிவ பக்தர்கள் மஹாசிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் குளித்து முடித்து, விரதத்தை தொடங்கி நாள் முழுவதும் சிறிதும் உறங்காமல் அருகிலுள்ள சிவன் கோயில்களுக்குச் சென்று சிவனை கண்டு தரிசித்து, மறுநாள் அதிகாலையில் சிவாலயங்களில் அபிஷேக ஆராதனைகள் முடிந்த பின் தன்னுடைய விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாக கொள்வார்கள்.
மஹாசிவராத்திரி நாளில் சிவபெருமானை முழு பக்தியுடனும் சடங்குகளுடனும் வழிபட்டால், சிவ பெருமான மகிழ்ச்சி, செல்வம், ஆரோக்கியம் என அனைத்தையும் தருகிறார். உங்கள் அம்ன ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறும். செவ்வாய்க்கிழமை, மார்ச் 1, 2022 அன்று, மகாசிவராத்திரி நாளில், சிவனின் அருளை முமுமையாக பெற செய்ய வேண்டியவை என்ன என்பதை பார்க்கலாம்.
மகாசிவராத்திரி நாளில் சிவபெருமான் சிவலிங்க வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் என புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளில் சிவலிங்க பிரதிஷ்டை சிறப்பு முக்கியத்துவம் பெறுவதற்கும் இதுவே காரணம். மஹாசிவராத்திரி நாளில் ருத்ராபிஷேகத்தை செய்தால், சிவ பெருமான மகிழ்ச்சி அடைந்து, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார்.
மேலும் படிக்க | ஈஷாவில் மார்ச் 1-ம் தேதி மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம்
மஹாசிவராத்திரியில் வழிபடும் முறை
மஹாசிவராத்திரி நாளில், காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். முடிந்தால், மகாசிவராத்திரியில் விரதம் இருக்கலாம். அதன் பிறகு, பஞ்சாமிர்தத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும். சிவலிங்கத்தின் மீது தண்ணீர், பால், தயிர், தேன், நெய் போன்றவற்றினால் ஒவ்வொன்றாக அபிஷேகம் செய்யவும். கடைசியாக, தண்ணீர் அபிஷேகம் செய்யவும். இதற்குப் பிறகு, சிவபெருமானுக்கு சந்தனத் திலகம், குங்குமம் இட்டு, வில்வ இலையினால் அர்ச்சனை செய்யவும்.
மஹாசிவராத்ரி நாளில் சிவபுராணம், தேவாரம், திருவாசகம், ஆகியவற்றை பாராயனம் செய்யலாம். சிவ ஸ்தோத்திரங்களை ஜபிக்கலாம். முடிந்தால், ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களையும் பாராயணம் செய்யலாம். அருலில் உள்ள சிவாலயங்களில் நடைபெறும் உபன்யாசங்களைக் கேட்டு மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டலாம். மனதிற்குள் சிவ மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு இருக்கலாம்.
மேலும் படிக்க | வெற்றியை அள்ளித் தரும் திங்கட்கிழமை பரிகாரங்கள்..!!
மஹாசிவராத்திரி தினத்தன்று ருத்ராபிஷேகம் செய்வதால் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள், நோய்கள், துக்கங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. சிவன் அருளால் மிகுந்த மகிழ்ச்சி, செழிப்பு, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை ஆகியவை அமையும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR