முன்னாள் காதலியை சந்திக்க சுரங்கம் தோண்டிய 50 வயது இளைஞர் கைது!

தனது முன்னாள் காதலியை சந்திக்க வீட்டில் சுரங்கம் தோண்டி மாட்டிக்கொண்ட 50 வயது காதலன் கைது!!

Last Updated : May 1, 2019, 03:43 PM IST
முன்னாள் காதலியை சந்திக்க சுரங்கம் தோண்டிய 50 வயது இளைஞர் கைது! title=

தனது முன்னாள் காதலியை சந்திக்க வீட்டில் சுரங்கம் தோண்டி மாட்டிக்கொண்ட 50 வயது காதலன் கைது!!

அமெரிக்காவை சேர்ந்த 50 வயதுடைய கேசர் அர்ணால்டோ கோமஸ் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஏதோ ஒரு காரணத்திற்காக இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை பூதாகரமாகி நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நீதிமன்றம் கோமஸ் அவரது காதலியை அவரது விருப்பம் இல்லாமல் சந்திக்ககூடாது என தடை விதித்தது.  

இதை தொடர்ந்து, ஒருநாள் அவரது காதலி வீட்டில் இருக்கும் போது வீட்டின் அடிப்பகுதியில் இருந்து ஏதோ சத்தம் வந்துள்ளது. முதலில் இதை சாதரணமாக எடுத்துக்கொண்ட அவர்,  நேரம் ஆக ஆக சத்தம் அதிகமாகிகொண்டே இருந்தது. இதனால் சந்தேகமடைந்து சோதனை செய்தபோது அங்கு தனது முன்னாள் காதலன் வெளியில் இருந்து வீட்டிற்குள் வர குழி தோண்டி அதற்குள் அவரே சிக்கி கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை தீயணைப்பு படை மற்றும் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து கோமஸை மீட்டார். 

பின்னர் கோர்ட் உத்தரவையும் மீறி தன்னை பார்க்க, கண்காணிக்க முயற்சித்ததாக அவர் மீது புகார் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரை ஜெயிலில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் குழியில் சிக்கியதால் முச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் அவர் ஜெயிலில் அடைக்கப்படுவார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

Trending News