சந்தேகத்தால் மனைவியின் பெண்ணுறுப்பை பசை வைத்து ஒட்டிய கணவர்!

கள்ள தொடர்பு வைத்திருந்த மனைவியின் பிறப்புறுப்பை பசை போட்டு ஒட்டிய கணவன்!!

Updated: Feb 17, 2020, 06:23 PM IST
சந்தேகத்தால் மனைவியின் பெண்ணுறுப்பை பசை வைத்து ஒட்டிய கணவர்!

கள்ள தொடர்பு வைத்திருந்த மனைவியின் பிறப்புறுப்பை பசை போட்டு ஒட்டிய கணவன்!!

மோசடி வாழ்க்கைத் துணைவர்கள் மோசமான விளைவுகளைக் கண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள். இருப்பினும், பழிவாங்கும் கணவர் எடுத்த பழிவாங்கும் செய்கைக்கு பைத்திய காரத்தனம் என்று முத்திரை குத்தலாம்!. மற்ற ஆண்களுடன் தன்னை ஏமாற்றியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து கணவர் தனது மனைவியின் பெண்ணுறுப்பை பசை வைத்து ஒட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது மனைவி நான்கு ஆண்களுடன் "சட்டவிரோத உறவு" வைத்திருப்பதாகக் கூறப்பட்டதை அறிந்தபின், அவர் இந்த செயல்முறையை கையாண்டுள்ளார்.

தெற்கு கென்யாவில் கிட்டூய் கவுண்டி பகுதியைச் சேர்ந்தவர் டென்னிஸ் முமோ இவர் தனது மனைவி மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை அவரது சமூகவலைதளபக்கம் மூலம் தெரிந்து கொண்டார். அவர் வேலை விஷயமாக வெளியூருக்குச் செல்லும் போது எல்லாம் அவரது மனைவி மற்ற ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்து வருகிறார் என்று அவருக்குச் சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு வெளியூருக்குச் செல்லும் வேலை வந்த போது அவரது மனைவியின் பிறப்புறுப்பில் சூப்பர் க்ளு எனப்படும் பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொள்ளும் வகையிலான பசையைப் பயன்படுத்தி ஒட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து காவல்துறைக்கு இது குறித்து புகார் சென்றது. போலீசார் நடத்திய விசாரணையில் தான்தான் தன் மனைவியை இப்படிச் செய்ததாகவும், தனது திருமண வாழ்க்கை காப்பாற்றிக்கொள்ளவே இப்படி செய்ததாகவும், தனது மனைவிக்குப் பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதற்கு தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும், தன் மனைவி மற்ற ஆண்களுக்கு அவரது நிர்வாண புகைப்படங்களை அனுப்பி சாட் செய்துள்ளதாகவும் வாக்குமூலம் அளித்தார். போலீசார் இருவர் மீதும் தற்போது தனித்தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.