Rate Hike: ஏப்ரலில் இருந்து கார் பைக்குகளின் விலை அதிகரிப்பு! எந்த பிராண்ட் எவ்வளவு உயர்வு?

Tata Motors, Maruti Suzuki: மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உட்பல பல கார் தயாரிப்பாளர்கள், இன்னும் ஒரு வாரத்தில், அதாவது புதிய நிதியாண்டு தொடங்கும் ஏப்ரலில் இருந்து விலையை அதிகரிக்கின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 24, 2023, 03:45 PM IST
  • ஏப்ரலில் இருந்து வாகனங்களின் விலை அதிகரிக்கிறது
  • மாருதி சுஸுகியின் வணிக வாகனங்களின் விலை உயர்வு
  • புதிய நிதியாண்டு முதல் கார்களின் விலை அதிகரிக்கும்
Rate Hike: ஏப்ரலில் இருந்து கார் பைக்குகளின் விலை அதிகரிப்பு! எந்த பிராண்ட் எவ்வளவு உயர்வு? title=

நியூடெல்லி: இந்தியாவில் உள்ள பல ஆட்டோ நிறுவனங்கள், ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதன் வர்த்தக வாகனங்களின் விலையை 2-5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உள்ள டாடா மோட்டர்ஸ், மாருதி சுசூகி மற்றும் ஹோண்ட போன்ற வாகன நிறுவனங்களின் கார் வாங்கத் திட்டமிட்டிருந்தால், ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் வாங்கலாம், இல்லாவிட்டால் அதற்குப் பிறகு அதிகப் பணத்தைச் செலவிட வேண்டியிருக்கும்.

BS-VI மாசு உமிழ்வு விதிமுறைகளின் இரண்டாம் கட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய நிதியாண்டு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். எந்த நிறுவனத்தின் காராக இருந்தாலும். மாடல் மற்றும் மாறுபாட்டிற்கு ஏற்ப விலை மாறுபடும் என்றாலும், அனைத்து வணிக வாகனங்களிலும் விலை உயர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.

எந்த நிறுவனம்? எவ்வளவு விலை உயர்வு?

மாருதி சுசுகி
"ஒட்டுமொத்த பணவீக்கம் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளின்" பாதிப்பை ஓரளவு ஈடுகட்ட, ஏப்ரல் மாதத்தில் அதன் மாடல் வரம்பின் விலைகளை உயர்த்துவதாக மாருதி சுசுகி இந்தியா தெரிவித்துள்ளது. இருப்பினும், வணிக வாகனங்கள் மீது விதிக்கப்படும் விலை உயர்வு சற்று அதிகமாக இருக்கும்.

"நிறுவனம் செலவைக் குறைப்பதற்கும், அதிகரிப்பை ஓரளவு ஈடுகட்டுவதற்கும் அதிகபட்ச முயற்சியை மேற்கொள்ளும் அதே வேளையில், விலை உயர்வு என்பது இன்றியமையாததாக மாறியுள்ளது" என்று மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: சொகுசுக் கார்களில் விலை குறைவானது எது? மஹிந்திரா தார் எஸ்யூவி?

டாடா மோட்டார்ஸ்
கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க, தனது பயணிகள் வாகனங்களை மேம்படுத்தியுள்ள டாடா மோட்டார்ஸ், வணிக வாகனங்களின் விலையையும் 5 சதவீதம் உயர்த்தவுள்ளது.

“எங்கள் போர்ட்ஃபோலியோ ஏற்கனவே BS-VI கட்டம் 2 உமிழ்வு விதிமுறைகளுக்கு பிப்ரவரி 2023 இல், ஒழுங்குமுறை காலக்கெடுவிற்கு முன்னதாக மாறிவிட்டது. மேம்பட்ட செயல்திறனுடன் தயாரிப்புகளை மேம்படுத்தியுள்ளோம், புதிய தொழில்நுட்ப அம்சங்களைச் சேர்த்துள்ளோம் மற்றும் எங்கள் வாகனங்களின் உத்தரவாதத்தை அதிகரித்துள்ளோம், ”என்று டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்திரா பிடிஐயிடம் தெரிவித்தார்.

ஹோண்டா
ஹோண்டா கார்ஸ் இந்தியாவும் அடுத்த மாதம் முதல் நுழைவு நிலை காம்பாக்ட் செடான் அமேஸின் விலையை ரூ.12,000 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மாடலின் வெவ்வேறு டிரிம்களைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடும்.

” வரவிருக்கும் கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளின் காரணமாக உற்பத்திச் செலவு அதிகரிப்பதற்குக் காரணியாக ஏப்ரல் 1 முதல் அமேஸ் விலையை ரூ.12,000 வரை உயர்த்துவோம்,” என்று ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை துணைத் தலைவர் குணால் பெஹ்ல் பிடிஐயிடம் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அடேங்கப்பா! விற்பனையில் வரலாறு படைத்த மாருதி சுசூகி ஈக்கோ கார்

முன்னதாக, ஜப்பானிய கார் தயாரிப்பாளரான ஹோண்டா, இந்திய சந்தையில் தனது சந்தைப் பங்கை உயர்த்துவதற்காக அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்துவதாகக் கூறியது. ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் இரண்டு மாடல்கள் தற்போது இந்திய சந்தைகளில் உள்ளன. செடான் மற்றும் காம்பாக்ட் செடான்.

ஹீரோ மோட்டோகார்ப்
Hero Motocorp நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலைகளை ஏப்ரல் 1 முதல் 2 சதவீதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்தது. கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான நிறுவனத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் நிகழ்நேர ஓட்டுநர் உமிழ்வு அளவைக் கண்காணிக்க, வாகனங்களில் சுய-கண்டறியும் சாதனம் இருக்க வேண்டும். உமிழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க, வினையூக்கி மாற்றி மற்றும் ஆக்ஸிஜன் சென்சார்கள் போன்ற உமிழ்வுத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய பகுதிகளை சாதனம் தொடர்ந்து கண்காணிக்கும்.

மேலும் படிக்க: ராயல் என்ஃபீல்டு வெறும் ரூ.50 ஆயிரத்தில்..! EMI ரூ.5 ஆயிரம் மட்டுமே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News