Nails Breaking: ஆண்களை விட பெண்களுக்கு நகங்கள் நன்கு வளரும். எனவே பெண்கள் பெரும்பாலும் நீண்ட நகங்களை வைத்திருப்பார்கள். நீண்ட நகங்களைக் வைத்திருப்பது விரல்கள் மிகவும் அழகாக இருக்கும். ஆனால் அவற்றை பராமரிப்பது மிகவும் கடினம். பல நேரங்களில் அவசரமாக வேலை செய்யும் போது நகங்கள் உடைய அதிக வாய்ப்புள்ளது. பாத்திரங்கள் கழுவும் போது அல்லது துணிகளை துவைக்கும்போது நகங்கள் உடைய அதிக வாய்ப்புள்ளது. நகங்கள் உடைத்தால் கூட பரவாயில்லை, சில சமயங்களில் நகங்கள் தோலில் இருந்து மொத்தமாக வேரோடு பிடுங்கப்படும். இது போன்ற சமயங்களில் அதிக வலி மற்றும் எரிச்சலை தரும். இதனை சரியாக பார்க்காவிட்டால் சீழ் உருவாகவும் வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | வெயில் காலத்தில் உங்கள் கால் இப்படி ஆகிறதா? வெறும் 10 நிமிடங்களில் நீக்கிவிடலாம்!
நகங்கள் உடைய நிறைய காரணங்கள் உள்ளது. சில நேரங்களில் உடலில் தேவையான சில வைட்டமின்கள் இல்லாததால் நகங்கள் உடைய வாய்ப்புள்ளது. பொதுவாக தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கும் போது நகங்கள் உடைகிறது. மேலும் சரியான பராமரிப்பு இல்லாத போதும் நகங்களும் உடையும். நகங்களை நாம் பலவற்றிற்கு பயன்படுத்துகிறோம். கேன்களை திறக்க, மூடிகளை திறக்க என்று பல இடங்களில் பயன்படுத்துகிறோம். சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். பற்களால் நகங்களைத் தொடர்ந்து கடிப்பதால் நகங்கள் எளிதில் உடைய வாய்ப்புள்ளது. மேலும் தெரியாமல் நம் உடலில் எங்கும் பட்டு உடைவதற்கும் வாய்ப்புள்ளது.
நகம் உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
நகங்கள் உடைந்தால் முதலில் அதனை சுற்றியுள்ள சிறு சிறு துண்டுகளை முழுமையாக வெட்ட வேண்டும். இதற்கு நல்ல தரமான நெயில் கட்டரை வாங்கி உபயோகப்படுத்துங்கள். நெயில் கட்டர் எப்போதும் கூர்மையாக இருக்க வேண்டும், அதே சமயம் துருப்பிடிக்க கூடாது. நெயில் கட்டர் கொண்டு நகங்களை ஒழுங்கமைக்க முயற்சி செய்யுங்கள், இல்லையெனில் அது வலியை ஏற்படுத்தும். நகம் மட்டும் உடையாமல் தோலும் சேர்ந்து வெளியே வந்து இருந்தால் மருத்துவரை அணுகுவது நலல்து. மேலும், தூசி மற்றும் அழுக்கு காயத்தின் மீது படாமல் இருக்க அதன் மீது கட்டு போடலாம். மேலும் காயம் பட்ட இடத்தில் தண்ணீர் படமால் பார்த்து கொள்வது நல்லது. இது காயத்தில் சீழ் உருவாவதை தடுக்கும்.
நகங்கள் உடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
உங்கள் நகங்களில் நீர்ச்சத்து அதிகமாக இருந்தால், அவை ஆரோக்கியமாக இருக்கும். இதன் காரணமாக நகம் உடைவது குறைவு. விரைவாக உடைந்து போகாது. எனவே தொடர்ந்து நகங்களை ஈரப்பதமாக வைத்து இருங்கள். உடலில் நீரேற்றத்தை பராமரிக்க தினசரி அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் நகங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் நன்மை பயக்கும். உடலில் உள்ள தோல், முடி, நகங்கள் ஆரோக்கியமாக இருக்க போதுமான ஊட்டச்சத்து தேவை. எனவே அதற்கேற்ப உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பயோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வது நல்லது. இது நகங்களை வலுப்படுத்தும் மற்றும் நகங்களின் வளர்ச்சியும் தொடர்ந்து சீராக இருக்கும்.
மேலும் படிக்க | தூங்கும் போது தலையணை பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ