EPFO ATM Money Withdrawal Latest News: ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மட்டுமின்றி ஓய்வூதிய நிதி மற்றும் காப்பீட்டு நிதி ஆகியவற்றையும் நிர்வகிக்கிறது. குறிப்பாக, இந்த திட்டத்தின் கணக்கில் ஊழியர்களின் பங்களிப்பு மட்டுமின்றி அவர்களுக்கு வேலையளிக்கும் முதலாளிகளின் பங்களிப்பும் இடம்பெறும். இதில் ஊழியர்கள் தங்களின் பங்களிப்பில் இருந்து அவசரத் தேவைகளுக்காக அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
தற்போது வரை பணத்தை வெளியே எடுக்க வேண்டும் என்றால் EPFO இணையதளத்தில் நீங்கள் கோரிக்கை எழுப்பி குறைந்தது 7-10 நாள்கள் வரை காத்திருக்க வேண்டும். அதன்பின், நீங்கள் கொடுத்திருக்கும் வங்கிக் கணக்கிற்கே அந்த தொகையை வந்துவிடும். அதன்பின் உங்களது வங்கியின் டெபிட் கார்டை பயன்படுத்தி அந்த தொகையை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இனி 7-10 நாள்கள் வரை காத்திருக்க வேண்டாம். உடனே பணத்தை வெளியே எடுக்கும் வகையில் தனி வசதியை கொண்டுவர இருப்பதாக EPFO அறிவித்துள்ளது.
ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் முறை
ஆம், அதாவது நீங்கள் ஏடிஎம் மையத்திற்கு சென்றே உங்கள் PF கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும் வகையில் புதிய வசதியை 2025ஆம் ஆண்டில் கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தற்போது அரசு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. மத்திய தொழிலாளர் துறையின் செயலாளர் சுமிதா தாவ்ரா கூறுகையில், EPF பயனாளிகள் தங்களின் PF தொடர்பான கிளைம் செட்டில் செய்யப்பட்ட பின்னரே, அவர்கள் தங்களின் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என்றார்.
7 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை கொண்ட EPFO வங்கிகளை போன்ற சேவைகளை வழங்குவதற்கு தயாராகி வருவதாகவும் அவர் கூறினார். தொழில்நுட்ப ரீதியாக இதுசார்ந்த பணிகள் கடந்த சில மாதங்களாகே நடைபெற்று வருவதாகவும், தற்போது தங்களின் கவனம் முழுவதம் தொழில்நுட்ப கட்டமைப்பை பலப்படுத்துவதில்தான் இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இதில் முன்னேற்றம் கண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார். அனைத்தும் தயாரான பின்னர், 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதுகுறித்த அப்டேட் தெரியவரும் என கூறப்படுகிறது.
தனி கார்ட்
PF மட்டுமின்றி மெடிக்கல் கவரேஜ், ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கான நிதியுதவி ஆகியவையும் இந்த முறையில் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், வரும் ஜனவரியில் இருந்தே நீங்கள் PF பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வழக்கம் தொடங்கலாம். இதனால், நீங்கள் பண கோரிக்கை மற்றும் பணத்தை பெறுவது ஆகியவை விரைவாக நடைபெறும்.
அந்த வகையில், இதற்காக தனி ஏடிஎம் கார்டு கொண்டுவரப்படுமா, அல்லது வங்கியின் டெபிட் கார்டே போதுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வங்கி டெபிட் கார்ட் போல் தனியாக இதற்கென கார்ட் வழங்கப்படும் எனவும் அதனை வைத்து ஏடிஎம் மையத்தில் நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
பணம் எடுக்கும் விதிமுறைகள்
EPFO பயனர், பணியில் இருக்கும் தனது கணக்கில் உள்ள தொகையை மொத்தமாக எடுக்க முடியாது. ஒரு மாத காலம் வேலையில்லாமல் இருந்தால் 75 சதவீதம் தொகையை எடுத்துக்கொள்ளலாம். இரண்டு மாத காலம் வேலையில்லாமல் இருந்தால் முழுவதுமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | EPFO புத்தாண்டு பரிசு: PF உறுப்பினர்களுக்கு காத்திருக்கும் 3 குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ