மீண்டும் அமெரிக்காவில் இந்த காதல் ஜோடி! Photos Inside!

ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள்.

Last Updated : Mar 6, 2018, 11:18 AM IST
மீண்டும் அமெரிக்காவில் இந்த காதல் ஜோடி! Photos Inside! title=

ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு சென்றிருநத்த இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டிவிட்டரில் பதிவேற்றியுள்ளார் விக்னேஷ் சிவன்.  

இந்த இரு காதல் ஜோடியும் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கிருந்து கிளம்பும்போது, நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டிவிட்டரில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தைத் கலக்கி வருகிறது.

 

 

தற்போது நயன்தாரா ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’, ‘கோ கோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் எடுத்துள்ள இந்த புகைப்படங்கள் மிகவும் நெருக்கமாக உள்ளது போல காட்சியளிக்கிறது.

Trending News