அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ்! அறிகுறிகள், பாதிப்புகள் என்னென்ன?

இந்தியாவில் புதிய வகை கொரோனா வகை கொரோனா நோய் தாெற்று பரவி வருகிறது. இந்த நோய்த்தொற்றால் நாட்டில் பலர் பாதிப்படைந்து வருகின்றனர்.  

Written by - Yuvashree | Last Updated : Dec 26, 2023, 04:39 PM IST
  • இந்தியாவில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது
  • இதன் அறிகுறிகள் என்ன?
  • இந்த நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள்.
அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா வைரஸ்! அறிகுறிகள், பாதிப்புகள் என்னென்ன?  title=

கொரோனா நோய் தொற்று:

கொரோனா நோய் தொற்றில் கோரத்தாண்டவம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. ஆரம்பத்தில் மிகவும் நோய் தொற்று பாதிப்புகள் இருந்த போதே, மத்திய அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. அப்படியிருந்தும், நோய் தொற்று ஏதேனும் ஒரு வகையில் பரவிக்கொண்டே இருந்தது. தமிழகத்தில் ஒரு நாளைக்கு 8-10 பேருக்கு பரவி வந்த நோய் தொற்று, பின்னாளில் 1000-2000த்தை தாண்டியது. அவ்வப்போது கொரோனா தொற்று குறைவான சமயங்களில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் போடப்பட்டன. இதையடுத்து மீண்டும் சில மாதங்கள் கழித்து கொரோனாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை பரவ தொடங்கியது. 

காெரோனாவை ஒரே அடியாக ஒழிக்க முடியவில்லை என்றாலும், அதற்கு ஏற்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களின் வயதிற்கு ஏற்ப அனைவருக்கும் செலுத்தப்பட்டது. இதனால், கொரோனாவின் பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் பெயர் என்ன? இந்த நோய் தொற்றினால் எந்த வகையான பாதிப்புகள் ஏற்படும்? இந்த நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? அனைத்தையும் இங்கு பார்க்கலாம். 

JN.1 வகை கொரோனா வைரஸ்:

இதற்கு முன்னர் பரவிய கொரோனா வைரஸ் வகை தொற்றுக்களை விட, தற்போது பரவி வரும் ஜே.என் 1 வகை கொரோனா தொற்று எளிதில் பரவக்கூடியது என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த புதிய வகை கொரோனா தொற்று முதலில் கேரளாவில் இருப்பவர்களுக்கு பரவியிருப்பதாக கண்டுபிடிக்கப்படது. இந்த வகை கொரோனா வைரஸ் தொற்றுதான் அமெரிக்காவில் தற்போது பரவி வருவதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது. 
அறிகுறிகள்:

மேலும் படிக்க | Weight Loss Tips: தொங்கும் தொப்பை கரைய.... ‘3’ எளிய பயிற்சிகள்!

ஜே.என் வகை கொரோனா தொற்று இருப்பவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்:

>காய்ச்சல்
>மூக்கடைப்பு
>தொண்டை வலி
>தலை வலி
>சிலருக்கு குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
>மிகவும் சோர்வாக உணர்தல்
>தசை வலி
>ஒரு சிலருக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும்
>சிலருக்கு பசியின்மை, குமட்டல் போன்ற உணர்வுகள் ஏற்படும்

எந்த வகையான அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அனுகுவது நல்லது. 

தற்காத்து கொள்வது எப்படி? 

>காய்ச்சல் வந்தால் மருத்துவரை உடனடியாக அணுகுவது.
>புதிய வகை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் தனிமைப்படுத்திக்கொள்வது.
>எப்போதும் மாஸ்க் அணிவது.
>மருத்துவரின் அறிவுரைப்படி சரியாக மருந்துகளை எடுத்துக்கொள்வது.
>நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களிடம் இருந்து விலகியிருப்பது.
>அடிக்கடி கை,கால்களை சுத்தமாக கழுவுவது
>குழந்தைகள், வயதானவர்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்

மேலும் படிக்க | 1 வருடத்திற்குள் உங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News