நிர்ஜலா ஏகாதசி 2022: மகாவிஷ்ணுவின் அருளால் மனதும் உடலும் தூய்மையாகும்

ஆன்மீகத்தில் ஏகாதசி நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நிர்ஜலா ஏகாதசி  பீமசேன ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 5, 2022, 01:43 PM IST
நிர்ஜலா ஏகாதசி 2022: மகாவிஷ்ணுவின் அருளால் மனதும் உடலும் தூய்மையாகும் title=

நிர்ஜலா ஏகாதசி 2022: ஆன்மீகத்தில் ஏகாதசி நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏகாதசி நாளில் விஷ்ணுவை வழிபடுவது மிகவும் சிறப்பு. செல்வம், புகழ், பெருமை மற்றும் குழந்தை செல்வம் ஆகியவற்றை அடைவதற்காக ஏகாதசி அன்று விரதம் அனுசரிக்கப்படுகிறது. ஏகாதசி மாதத்தில் இரண்டு முறை வருகிறது. ஒன்று சுக்ல பக்ஷத்திலும் ஒன்று கிருஷ்ண பக்ஷத்திலும் வரும்.  வைகாசி மாதம், சுக்ல பக்ஷ ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. 

நிர்ஜலா ஏகாதசி தேதி 2022 

நிர்ஜலா ஏகாதசி 2022 விரதம் தொடங்கும் நேரம் மற்றும் தேதி: ஜூன் 10 காலை 07:25 மணி 

நிர்ஜலா ஏகாதசி 2022 விரதம் முடியும் நேரம் மற்றும் தேதி: ஜூன் 11, மாலை 05:45 மணிக்கு 
நிர்ஜலா ஏகாதசி எப்போது

வைகாசி மாதத்தின் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசி திதி நிர்ஜல ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.சுக்ல பக்ஷ ஏகாதசி விரதம் ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கடைப்பிடிக்கப்படும். ஜூன் 10ம் தேதி உண்ணாவிரதம் துவங்கி, 11ம் தேதி விரதம் நிறைவடையும்.

மேலும் படிக்க | செவ்வாய் - சனி கூட்டணி: மே 17 வரை சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

நிர்ஜலா ஏகாதசி விரத வழிபாட்டு முறை

ஏகாதசி நாளில் காலையில் குளித்துவிட்டு விஷ்ணுவை தியானியுங்கள்.

மஞ்சள் நிற ஆடை அணிந்து, விஷ்ணு சிலைக்கு முன் நெய் தீபம் ஏற்றவும்.

விரதத்தைக் கடைப்பிடிக்கும் பக்தர்கள் விஷ்ணுவின் சிலைக்கு முன்பாக ஏகாதசி விரதக் கதையைப் படிக்க வேண்டும் அல்லது ஏகாதசி விரதக் கதையைக் கேட்க வேண்டும்.

விரதம் இருக்கும் நாளின் தண்ணீர் மற்றும் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனைத்து விரத விதிகளையும் பின்பற்ற வேண்டும்.

நிர்ஜல ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்கள் 24 மணி நேரமும் அன்னம் நீர் எதுவும் இல்லாமல் விஷ்ணுவை வழிபட வேண்டும்.

மேலும் படிக்க | குரு - சுக்கிரன் கூட்டணியினால் இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தான்

நிர்ஜலா ஏகாதசி விரதத்தின் பலன்கள்

1. உடலும் மனமும் தூய்மையடைகிறது

2. மாயையிலிருந்து விடுதலை

3. ஆன்மீக நம்பிக்கை மேம்படுகிறது

நிர்ஜலா ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பவர், இந்த உலக பந்தத்தில் இருந்தும், உலக மாயைகளில் இருந்து விடுபட்டு முக்தி அடைவார் என்று நம்பப்படுகிறது. அவருக்கு சொர்க்கத்தில் தனி இடம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | Astro: அனைவரையும் காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ‘3’ ராசிக்காரர்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News