பணவீக்கத்தை குறைத்து, கஷ்டத்தை போக்க மத்திய அரசின் முயற்சிகள்... என்ன தெரியுமா?

Nirmala Sitharaman About Inflation: பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும், எரிவாயு விலையை குறைக்கும் முயற்சி குறைத்தும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 26, 2023, 05:55 PM IST
  • உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
  • பணவீக்கம் 6 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பணவீக்கத்தை குறைத்து, கஷ்டத்தை போக்க மத்திய அரசின் முயற்சிகள்... என்ன தெரியுமா? title=

Nirmala Sitharaman About Inflation: விநியோகம் தொடர்பான பருவகால பிரச்சனைகளால் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்கும் முயற்சிகளுடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு விலையை குறைக்கும் முயற்சிகளையும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இவை இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்தார். கொரோனா தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. 

கலால் வரி

இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,"2021 நவம்பரில், எரிபொருளின் மீதான கலால் வரியை குறைக்குமாறு பிரதமர் எங்களுக்கு உத்தரவிட்டார். இதன் காரணமாக தீபாவளியின் போது அதனை குறைத்து அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு, 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மீண்டும் கலால் வரியை குறைத்தோம். இந்த அனைத்து காரணங்களால், எரிபொருளின் விலை ஓரளவு தணிந்தது" என்றார். 

மேலும் படிக்க | வரி செலுத்துவோருக்கு முக்கிய அப்டேட்: ஐடிஆர் படிவங்களை வெளியிட்டது வருமான வரித்துறை

பணவீக்கம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கூறினார். மேலும், அவர், "ஆனால் எரிபொருள் அல்லது இயற்கை எரிவாயு குறித்து நாம் பேசும்போது, ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தயாரிப்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றன, குறிப்பாக கோவிட் தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, விலைகள் அதிகரித்துள்ளன. இதையும் மீறி இறக்குமதி நடந்து வருகிறது. மத்திய அளவில், அதன் விலையை குறைக்க கலால் வரியை குறைத்துள்ளோம்.

பணவீக்கம்

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவற்றின் விலைகள் குறித்து அமைச்சர்கள் குழு கண்காணித்து வருகிறது. சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் இருப்பு வழங்கப்பட்டது. அரிசி விலை அதிகரித்தபோது, இடையக ஸ்டாக்கில் இருந்து அரிசியை விடுவித்தோம். 

விலையை குறைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 6 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாகக் குறைந்ததற்கு இதுவே காரணம். பருவகால அளவில் விநியோகம் தொடர்பான பிரச்சனைகளால் பணவீக்கம் அதிகரித்துள்ளது, இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மீண்டும் ஒரு டிஏ ஹைக், 46% ஆக ஏற்றம், குஷியில் ஊழியர்கள்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News