Ola Electric Scooter அதிரடி அறிமுகம் இன்று: இதுதான் விலையா?

முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் ஓலா நிறுவனம் ஒரு லட்சம் முன்-முன்பதிவுகளைப் பெற்றதாகக் கூறியது. மின்சார வாகனங்களுக்கான சந்தையில் இது ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2021, 09:38 AM IST
Ola Electric Scooter அதிரடி அறிமுகம் இன்று: இதுதான் விலையா?  title=

மிக அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டர் இன்று மதியம் 2 மணிக்கு அறிமுகம் ஆகவுள்ளது. இதற்கிடையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் செயலுத்தியானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் ஓலா நிறுவனம் ஒரு லட்சம் முன்-முன்பதிவுகளைப் பெற்றதாகக் கூறியது. மின்சார வாகனங்களுக்கான சந்தையில் இது ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.

இரு நாட்களுக்கு முன்பு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு ட்வீட்டில் ஓலா மின்சார ஸ்கூட்டரின் விலையை அறிவிப்பதாக கூறி கடைசி நிமிஷத்தில் அதை சொல்லாமல் நிறுத்தினார். இதை ரீட்வீட் செய்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், “அவரை விலை விவரத்தை வெளியிட விடுவோம் என நினைத்தீற்களா?” என ட்வீட் செய்தது.

இது போன்ற வித்தியாசமான பல வித மார்க்கெட்டிங் செயலுத்திகளை நிறுவனம் அழகாக செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையளர்களுடனான நல்ல தொடர்பை ஓலா நிறுவனம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

ALSO READ: Ola Electric Scooter இந்த நாளில் இந்த நேரத்தில் அதிரடியாய் அறிமுகம் ஆகிறது: Don't miss!!

ஹோம் டெலிவரி, மிகக் குறைந்த முன்பதிவு விலை, 10 வண்ணங்களின் ஸ்கூட்டர்களின் அறிமுகம், மிகப்பெரிய பூட் ஸ்பேஸ் போன்ற பல வித சிறப்பம்சங்களுடன் ஓலா ஸ்கூட்டர் அறிமுகம் ஆகவுள்ளது.  சந்தையில் உள்ள மற்ற மின்சார ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் வகையில் ஓலா ஸ்கூட்டரின் விலையும் இருக்கும் என சந்தை வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஓலா மின்சார ஸ்கூட்டர் பஜாஜ் சேத்தக், TVS iQube மற்றும் Ather 450X ஆகிய மின்சார ஸ்கூட்டர்களுடன் போட்டியில் இறங்கும்.

ஓலா மின்சார ஸ்கூட்டர் (Ola Electric Scooter) S1 ஸ்கூட்டர் என்று அழைக்கப்படக்கூடும். இது Etergo Appscooter ஐ அடிப்படையாகக் கொண்டது, 10 வண்ணங்களில் அறிமுகம் ஆகும். ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் அவ்வப்போது ஸ்கூட்டர் குறித்த பல விவரங்களை பதிவிட்டு வருகிறார்.

ஓலா  (Ola) மின்சார ஸ்கூட்டர் இன்று மதியம் 2:00 மணிக்கு ஒரு மெய்நிகர் நிகழ்வில் அறிமுகம் ஆகவுள்ளது. இது தொடர்பாக நிறுவனம் சமீபத்தில் ஒரு ட்வீட்டை வெளியிட்டது. ஆகஸ்ட் 15 அன்று மதியம் 2 மணிக்கு ஒரு மெய்நிகர் நிகழ்வை நடத்தி அதில் ஓலா மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளதாக ஓலா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

இதுவரை யாரும் அளிக்காத வரம்பு, அதிரடியான விலை, 'keyless experience' ஆகியவற்றுடன் இன்னும் பல சிறப்பம்சங்கள் ஓலா மின்சார ஸ்கூட்டரில் இருக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

செயலி சார்ந்த செயல்பாடுகள் இந்த ஸ்கூட்டரில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஓலா எலக்ட்ரிக் எஸ் 1 ஸ்கூட்டரை வெறும் 18 நிமிடங்களில் 50 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால், இது 150 கிமீ தூரத்திற்கு பயணிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளார்கள்.

இதற்கிடையில் இந்த ஸ்கூட்டரின் (Electric Scooter) விலை 80,000 ரூபாய் முதல் 1,00,000 ரூபாய்க்குள் இருக்கக்கூடும் என மின்சார வாகன வல்லுனர்கள் கருகுதுகிறார்கள். எனினும், இன்னும் சற்று நேரத்தில் இதன் உண்மையான விலை விவரம் தெரிந்து விடும்.

ALSO READ: Ola Electric ஸ்கூட்டருக்கு போட்டியாக ஆகஸ்ட் 15 அறிமுகமாகிறது Simple one ஸ்கூட்டர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News