ஏப்ரலில் 9 கிரகங்களும் ராசி மாறுவதால் ஏற்படும் அதிர்ஷ்ட பலன்கள்

கிட்டத்தட்ட 9 கோள்களும் வேறு ராசிகளுக்கு மாறும் நிலையில், இந்த மாதம் மிகப்பெரிய மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 3, 2022, 02:28 PM IST
  • ஏப்ரல் 2022 இல் கிரகங்களின் அரிய சேர்க்கை
  • 9 கிரகங்களும் ராசி மாறப்போகிறது
  • பணம் மற்றும் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன
ஏப்ரலில் 9 கிரகங்களும் ராசி மாறுவதால் ஏற்படும் அதிர்ஷ்ட பலன்கள் title=

ஜோதிட கணக்கீடுகளின்படி, ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இந்த மாதத்தில் ஒன்பது கிரகங்களும் ராசியை மாற்றப் போகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரு ராசியில் இருந்து மற்ற ராசிக்கு செல்வது, மற்றும் வக்கிரம் அடைவது ஆகியவை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிக அளவில் நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட 9 கோள்களும் வேறு ராசிகளுக்கு மாறும் நிலையில், இந்த மாதம் மிகப்பெரிய மாற்றத்தை, தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதன்படி ராகு கேது பெயர்ச்சி ஏப்ரல் 12, 2022 நிகழ்கிறது. குரு பெயர்ச்சி ஏப்ரல் 13, 2022 நிகழ்கிறது. சனி பெயர்ச்சி ஏப்ரல் 29, 2022 நிகழ்கிறது. மகர ராசியில் சனி மற்றும் சுக்ரன் மார்ச் 29 முதலே இணைகிறார்கள். ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை மாதப் பிறப்பன்று, ராகுவுடன் உச்சம் பெற்ற சூரியன் இணைகிறது. என்வே ஏப்ரல் 2022 இல் நடைபெற உள்ள முக்கிய பெயர்ச்சிகள் என்ன விளைவை ஏற்படுத்தி தரும் என்பதை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

மிதுனம் -
பணம் மற்றும் லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன, இதன் காரணமாக நிதி பக்கம் வலுவாக இருக்கும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
கடினமாக உழைத்தால், வேலையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.
புதிய வாகனம், வீடு வாங்கலாம்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

விருச்சிக ராசி-
நிதி சுமை குறையும். 
கௌரவம், மரியாதை உயரும் வாய்ப்புகள் உண்டு.
செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும்.
பொறுமையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
பணியிடத்தில் அனைவரும் உங்களைப் புகழ்வார்கள்.
உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுங்கள்.

தனுசு -
கல்வித் துறையுடன் தொடர்புடையவர்ளுக்கு, இந்த நேரம் சுமாரகதான் இருக்கும்.
எதிரிகள் வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள்.
சமய, ஆன்மிகப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.
உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கௌரவம், மரியாதை உயரும் வாய்ப்புகள் உண்டு.
நிதி நிலை பக்கம் வலுவாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News