ரேஷன் கார்டு பதிவிறக்கம்: மாநில அரசுகளால் மக்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் அரசால் வழங்கப்படுகிந்றன. இதன் மூலம் சந்தை விலையை விட குறைவான விலையில் மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் கிடைக்கின்றன. இது ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் சிறு சிறு தவறுகளால் ரேஷன் கார்டுக்கான பலன்களை மக்கள் இழக்க வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. இப்படி நடக்காமல் இருக்க, ரேஷன் கார்டில் தேவையான புதுப்பிப்புகள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். அப்படி ஒரு அத்தியாவசிய புதுப்பிப்பு பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த புதுப்பிப்பை செய்து முடிக்கவும்
பல சமயங்களில் வீட்டில் உள்ள ஒரு நபருக்கு திருமணம் நடந்து புதுப்பெண் வீட்டிற்கு வருவார். இருப்பினும், ரேஷன் கார்டில் புதிய உறுப்பினரின் பெயரைச் சேர்ப்பதில் மக்கள் காலதாமதம் செய்கிறார்கள். இதனால் அந்த குடும்பம் அந்த புதிய உறுப்பினரின் பங்கின் ரேஷனைப் பெற முடிவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், வீட்டிற்கு வந்திருக்கும் புதிய உறுப்பினர் பெயரையும் ரேஷன் கார்டில் விரைவில் சேர்க்க வேண்டியது அவசியமாகும்.
மேலும் படிக்க | எத்தனை வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன - நன்மைகள் மற்றும் இலவச பொருட்களின் விவரம்
ஆவணங்களை வழங்க வேண்டும்
ரேஷன் கார்டில் வீட்டிற்கு மணம் புரிந்து வரும் மருமகள் பெயரைச் சேர்ப்பதன் மூலம், அவரது பங்கின் ரேஷன் பொருட்களையும் பெற முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், திருமணமானவர்கள் இந்த தகவலை விரைவில் ரேஷன் கார்டில் புதுப்பிக்க வேண்டும். ரேஷன் கார்டில் உறுப்பினரின் பெயரை சேர்க்க, மாநில அரசுக்கு தேவையான சில ஆவணங்களையும் வழங்க வேண்டும்.
இந்த வேலையைச் செய்வதும் அவசியம்
இது தவிர, புதுமணத் தம்பதியின் பெயரை அவரது முந்தைய வீட்டின் ரேஷன் கார்டில் இருந்து நீக்குவதுடன், நீக்கப்பட்டதற்கான சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், புது வீட்டில் புதுமணத் தம்பதிகளின் பெயரைச் சேர்க்க திருமணப் பதிவுச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆகையால், இதை செய்ய, திருமணம் முடிந்த உடனேயே திருமணத்தை பதிவு செய்து விடுவது அவசியமாகும்.
இதற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்:
- வீட்டில் இருந்தபடியும் புதிய உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
- இதற்கு, முதலில், உங்கள் மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- உங்கள் மாநிலத்தில் ஆன்லைனில் உறுப்பினர்களின் பெயர்களைச் சேர்க்கும் வசதி இருந்தால், வீட்டில் இருந்தபடியே இந்த வேலையைச் செய்யலாம்.
- பல மாநிலங்கள் இந்த வசதியை தங்கள் போர்ட்டலில் வழங்கியுள்ளன.
- பல மாநிலங்களில் இந்த வசதி இல்லை.
மேலும் படிக்க | Ration Card பயனாளிகளுக்கு நல்ல செய்தி: இனி பொருட்களின் எடையில் ஏமாற்ற முடியாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ