கொரோனாவுக்குப் பிறகு வீட்டில் இருந்து வேலை செய்வது அதிகரித்துவிட்டது. பெரு நிறுவனங்கள் பலவும் வொர்க் பிரம் ஹோம் பாலிசியை கடைபிடிக்கின்றனர். இது பலருக்கு சவுகரியமாக இருந்தாலும், அலுவலகத்தில் வேலை பார்க்க பிடிக்காதவர்களுக்கு சில பின்னணி காரணங்கள் இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வொர்க் டிப்ரஷன்?
ஒருவர் அலுவலகத்தில் வேலை செய்யும் நேரங்களில் அடிக்கடி மன அழுத்தத்திற்கு உட்பட்டால் அது வொர்க் டிப்ரஷன். அலுவலகத்தில் மட்டுமல்லாது வீட்டில் இருந்தே வேலை செய்யும்போது கூட இது ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்கனவே மன அழுத்தத்தோடு இருக்கும் சிலர், அலுவலகத்தில் வேலை செய்யும் போது அது இன்னும் அதிகமாகி அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மேலும் படிக்க | இந்த 5 காரணங்களால் பெண்களுக்கு ஆண்கள் மீது ஆர்வம் குறையலாம்!
உலக சுகாதார நிறுவனம்
அலுவலகத்தின் சூழ்நிலை சரியாக இல்லை, எதிர்மறையாக இருப்பது போன்ற உணர்வு ஆகியவை பணியாளரின் உடல் நிலையும் மனநிலையையும் வெகுவாக பாதிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவையே பணியாளர்களுக்கு அலுவலகம் வருவதற்கு பிடிக்காமல் போவதற்கான முக்கிய காரணம் என்றும் கூறுகிறது. இதுபோன்ற எதிர்மறை சூழ்நிலையில் பணியாற்ற விரும்பாத பணியாளர்கள் அடிக்கடி அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்கவும் செய்வார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
வொர்க் டிப்ரஷன் அறிகுறிகள்
அடிக்கடி கவலை தரக்கூடிய நிகழ்வுகள் அலுவலகத்தில் ஏற்படுவது, வேலை பார்ப்பதில் சலிப்பு, வேலை செய்வதில் ஈடுபாடு குறைவு, மறதியால் பாதிக்கப்படுவது, தனக்கு மதிப்பு இல்லாதது போலும் தனிமையாகவும் உணர்வது, சோர்வு, தலைவலி, வயிற்று கோளாறு தேவையற்ற கோபம், மற்ற பணியாளர்களிடம் இருந்து எப்பொழுதும் விளக்கியே இருப்பது இதுபோன்று அறிகுறிகள் இருந்தால் நீங்கள் வொர்க் டிப்ரஷன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று அர்த்தம்.
நோய்க்கான காரணம்
எதிர்மறையாக இருக்கும் அலுவலக சூழ்நிலை, வேலை நேரங்களில் மாற்றம் அலுவலகத்தில் செய்யப்படும் அரசியல், மேல் அதிகாரிகளிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு இல்லாமை, அதிகப்படியான வேலை, வேலை போய் விடுமோ என்ற எண்ணம் உள்ளிட்டவை அடிகோடிட்டு காட்டப்படுகின்றன.
வொர்க் டிப்ரஷன் தவிர்க்க டிப்ஸ்
ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் பத்து நிமிட இடைவெளி எடுத்துக் கொள்ளலாம். மதிய வேலை உணவுகளில் மரத்தடியிலும் அல்லது காற்றோட்டமான வெளிகளிலும் அமர்ந்து உட்கொள்ளலாம். இடைவேளை நேரத்தில் ஏதாவது உடற்பயிற்சி அல்லது யோகா போன்றவற்றை செய்யலாம். சக பணியாளர்களுடன் ஏதாவது கதை பேசிக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு டிப்ரஷன் இருப்பதற்காக அறிகுறிகள் தெரிந்தால் இதைப்பற்றி உங்கள் மேல் அதிகாரிகளிடம் வெளிப்படையாக பேச முற்படுகங்கள்.
மேலும் படிக்க | இறக்கும் மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ