இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் இலவச 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வருகின்றன....
நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான பாரதிய ஏர்டெல் (Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான திட்டங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஏர்டெல் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாக பயனர்களுக்கு வழங்குகிறது. இது தவிர, ஆபரேட்டர் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ZEE5 உடனும் இணைந்துள்ளது. உண்மையில், OTT இயங்குதள சந்தாக்களை வழங்குவதில் ரிலையன்ஸ் ஜியோவையும் அடித்துக்கொள்ள யாராலும் முடியாது.
இந்த தளங்களில் இருந்து உள்ளடக்கத்தை வழங்குவதைத் தவிர, இரு ஆபரேட்டர்களும் ஷா அகாடமியிலிருந்து வரம்பற்ற அழைப்பு மற்றும் இலவச படிப்புகள் போன்ற டஜன் கணக்கான நன்மைகளை அறிவித்துள்ளனர். எனவே, அந்த வகையில், உள்ளடக்க நன்மைகளைத் தரும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் திட்டங்கள் இரண்டையும் ஒப்பிடுவோம்.
ஏர்டெல் திட்டங்கள்....
ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் பட்டியலில் மூன்று திட்டங்களைக் கொண்டுள்ளது, அதன் மூலம் நீங்கள் ஒரு மாதத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரை இலவசமாகப் பெறுவீர்கள். இந்த திட்டங்கள் ரூ.401, ரூ.448, மற்றும் ரூ.599 விலையில் உள்ளது.
1 - ரூ.401 திட்டம் 30 GB டேட்டா, அனைத்து சேவை வழங்குநர்களுக்கும் வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றை வழங்கும்.
2 - ரூ.448 திட்டம் ஒரு நாளைக்கு 3 GB தரவையும், வரம்பற்ற அழைப்பையும் வழங்கும்.
ALSO READ | மேலும் 13 நகரங்களில் One Plan திட்டத்தை அறிமுகப்படுத்திய ஏர்டெல்!!
3 - ரூ.599 திட்டம் தினமும் 2 GB தரவையும், 56 நாட்களுக்கு 100 SMS களுக்கான வசதியை வழங்கும்.
4 - ஏர்டெல்லில் மற்றொரு திட்டமும் உள்ளது, இது செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள், இதில் உங்களுக்கு 100 செய்திகள், 2 GB, டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் இலவச சந்தா கிடைக்கும். இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பையும் வழங்குகிறது.
OTT தளங்களுடன் ரிலையன்ஸ் ஜியோ திட்டங்கள்....
1 - ப்ரீபெய்ட் திட்டம் ரூ.401 விலையிலானது, இது ஒரு நாளைக்கு 3 GB தரவையும் கூடுதல் 6 GB தரவையும் வழங்குகிறது.
இந்தத் திட்டம் அதே நெட்வொர்க்கில் வரம்பற்ற அழைப்பையும் மற்றொரு நெட்வொர்க்கில் குரல் அழைப்புகளுக்கு 1,000 நிமிடங்களையும் வழங்குகிறது.
இந்த திட்டம் 100 செய்திகளையும் வழங்குகிறது, இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். கூடுதலாக, நிறுவனம் ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் VIP திட்டத்தையும் வழங்குகிறது. இதன் பொருள் சந்தா கிட்டத்தட்ட இலவசம்.
2 - ரூ.2,599 விலையிலானது. ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎன்எஸ்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றை அழைக்க 12,000 FUP நிமிடங்களை வழங்குகிறது. இந்த பேக் ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவுடன் கூடுதல் 10 GB டேட்டாவையும் வழங்குகிறது. இது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.