Bank Holidays: ஜூன் மாதத்தில் வங்கி விடுமுறை குறித்த முழு விபரம்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 23, 2022, 06:07 PM IST
Bank Holidays: ஜூன் மாதத்தில்  வங்கி விடுமுறை குறித்த முழு விபரம் title=

ஜூன் 2022 இல் வங்கி விடுமுறைகள்: வங்கி தொடர்பான ஏதேனும் வேலைகளைச் செய்ய திட்டமிட்டிருந்தால், வங்கி விடுமுறைகள் குறித்த தகவல்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம். இதன் மூலம், நமது பணிகளை தடையில்லாமல் நிறைவேற்றலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வரும் ஜூன் மாதத்திற்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஜூன் மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.

தேசிய விடுமுறைகள் தவிர, சில மாநிலத்திற்கான குறிப்பிட்ட விடுமுறைகள் இதில் அடங்கும். மேலும், இதில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும். ஜூன் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | இந்தியாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் தயார்

விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ

ஜூன் 2 (வியாழன்): மகாராணா பிரதாப் ஜெயந்தி/தெலுங்கானா ஸ்தாபக தினம் - ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விடுமுறை

ஜூன் 3 (வெள்ளிக்கிழமை): ஸ்ரீ குரு அர்ஜுன் தேவ் ஜியின் தியாக தினம் - பஞ்சாப் மாநிலத்தில் விடுமுறை

ஜூன் 5 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை

ஜூன் 11 (சனிக்கிழமை): இரண்டாவது சனிக்கிழமை வங்கி விடுமுறை

ஜூன் 12 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை

ஜூன் 14 (செவ்வாய்): துறவி குரு கபீர் ஜெயந்தி - ஒரிசா, சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விடுமுறை

ஜூன் 15 (புதன்கிழமை): ராஜ சங்கராந்தி/ஒய்எம்ஏ தினம்/குரு ஹர்கோவிந்த் பிறந்த நாள் - ஒரிசா, மிசோரம், ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் விடுமுறை

ஜூன் 19 (ஞாயிறு): வாராந்திர விடுமுறை

ஜூன் 22 (புதன்கிழமை): கர்ச்சி பூஜை - திரிபுராவில் விடுமுறை

ஜூன் 25 (சனிக்கிழமை): நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை

ஜூன் 26  (ஞாயிறு): வாராந்திர விடுமுறை

ஜூன் 30 (புதன்கிழமை): ராம்னா நீ - மிசோரம் மாநிலத்தில் விடுமுறை

மேலும் படிக்க | POSOCO: பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் வழங்கும் வேலைவாய்ப்புகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3lo

Trending News