November 2023 School Holiday: பொதுவாகவே அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் பல்வேறு பண்டிகைகள் மற்றும் விடுமுறைகள் நிறைந்த மாதமாக இருக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும், மாநிலத்திற்கும், கல்வி நிறுவனங்களுக்கும் ஏற்றவாறு பள்ளி விடுமுறைகள் வித்தியாசமாக இருக்கும். அவை பொதுவாக அகாடமிக் காலண்டர் பொறுத்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருக்கும். அக்டோபர் மாதத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என மாணவர்களுக்கு அதிக விடுமுறை நாட்கள் கிடைத்தது. இதே போல், தற்போது வரவிருக்கும் நவம்பரிலும் பள்ளிகளுக்கு அதிக நாட்கள் விடுமுறை வர உள்ளது. குருநானக் தேவ் பிறந்தநாள், தீபாவளி மற்றும் குழந்தைகள் தினம் ஆகியவை நவம்பர் மாதம் வருவதால், கொண்டாட்டங்கள் மற்றும் வரவிருக்கும் விடுமுறையை கொண்டாட மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
மேலும் படிக்க | தீபாவளிக்கு விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஜாக்பாட் பரிசு கொடுக்கும் அரசு!
விடுமுறை பட்டியல் மற்றும் விடுமுறை நாட்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும். 2023-24ஆம் கல்வியாண்டுக்கான விடுமுறை அட்டவணை இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஏற்கனவே அந்த அந்த மாநில அரசின் சார்பாக அனுப்பப்பட்டு இருக்கும். இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மாநில கல்வி வாரியங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, அரசு பள்ளி மற்றும் பிற பல வாரியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோடை மற்றும் குளிர்கால விடுமுறைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் ஆண்டு முழுவதும் ஏராளமான விடுமுறைகள் அனுசரிக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசிய விடுமுறை தினங்கள் கடைபிடிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மற்ற பள்ளிகளுக்கு பொது விடுமுறையும் கடைப்பிடிக்கப்படுகிறது.
வரும் நவம்பரில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?
தீபாவளி - ஞாயிறு - நவம்பர் 12, 2023
பாய் துஜ் (வளர்பிறை) - புதன்கிழமை - நவம்பர் 15, 2023
சட் பூஜை - ஞாயிறு - நவம்பர் 19, 2023
குரு தேக் பகதூர் தியாகி தினம் - வெள்ளிக்கிழமை - நவம்பர் 24, 2023
குருநானக் ஜெயந்தி - திங்கட்கிழமை - நவம்பர் 27, 2023
டிசம்பரில் எத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை?
கிறிஸ்துமஸ் - ஞாயிறு, டிசம்பர் 24, 2023
கிறிஸ்துமஸ் - திங்கட்கிழமை, டிசம்பர் 25, 2023
புத்தாண்டு - ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 31, 2023
இருப்பினும், சில கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களுக்கு வெவ்வேறு விடுமுறை அட்டவணைகளைக் கொண்டிருக்கலாம். இதன் விளைவாக, மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளியின் நாட்குறிப்பு அல்லது அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளைப் பார்க்கவும், அவர்களின் பள்ளியின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடுமுறை நாட்களைத் தீர்மானிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 28ஆம் தேதி இந்தியாவில் உள்ள சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல மாநிலங்களில், அக்டோபர் 28 ஆம் தேதி பள்ளிகள் மூடப்பட உள்ளன. மேலும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக மழை பொழிவு இருப்பதால் சில தினங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ