தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

New Smart Ration Card Apply Online : ரேஷன் கார்டுகள் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவதை உறுதி செய்கிறது. புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

Written by - RK Spark | Last Updated : Oct 26, 2023, 05:06 PM IST
  • ரேஷன் கார்டுகள் அடையாள சான்றாக கருதப்படுகிறது.
  • தற்போது ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது.
  • ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஸ்மார்ட் கார்டுகள் அவசியம்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? title=

ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது பழைய ரேஷன் கார்டுக்கு மாற்றாகும். இந்த ரேஷன் கார்டுகள் மானிய விலையில் அரசாங்கத்தால் உணவு தானியங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்க பயன்படுகிறது. ரேஷன் கார்டுகள் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பங்கள் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெறுவதை உறுதி செய்கிறது. ரேஷன் கார்டுகள் மற்ற அனைத்து அரசு துறைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள மற்றும் முகவரிக்கான சான்றாகவும் செயல்படுகின்றன. தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் மொபைல் அப்ளிகேஷன் மூலமும் செயல்படுகிறது, இதன் மூலம் பயனர் அருகில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கிடைக்கக்கூடிய பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.  வழக்கமான ரேஷன் கார்டுகளை போல, குடும்பத் தலைவர் கணவரின் பெயராகக் கொடுக்கப்பட்டால், ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் மனைவியின் பெயரில் இருக்கும்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கான தீபாவளிக்கு முன் டபுள் ஜாக்பாட், 4% டிஏ ஹைக்குடன் இதுவும்..

ஸ்மார்ட் ரேஷன் கார்ட்

தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் குடும்ப அட்டை திட்டத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்ற முடியும். ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும். 

ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

படி 1: இணையதளத்தில் உள்நுழையவும்

விண்ணப்பதாரர் தமிழ்நாடு பொது விநியோக அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.tnpds.gov.in ஐப் பார்வையிட்டு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

படி 2: ஸ்மார்ட் கார்டு விண்ணப்பத்தை கிளிக் செய்யவும்

அடுத்து, விண்ணப்பதாரர் Smart Card Application சேவைகள் பிரிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள Smart Card Application ஐ கிளிக் செய்ய வேண்டும்.

படி 3: விவரங்களை உள்ளிடவும்

அந்த விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம், விண்ணப்ப படிவம் திறக்கும். விண்ணப்பதாரர் அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டும்.

படி 4: புகைப்படத்தை பதிவேற்றல்

அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, விண்ணப்பதாரர் குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். 10 KB அளவுக்குக் குறைவான png, gif, jpeg, jpg போன்ற விதத்தில் புகைப்படம் இருக்கலாம்.

படி 5: வசிப்பிடச் சான்று பதிவேற்றம்

வசிப்பிட ஆதாரத்தை png, gif, jpeg மற்றும் pdf வடிவத்தில் பதிவேற்றலாம். கோப்பின் அளவு 100 KBக்கு மேல் இருக்கக்கூடாது.

படி 6: சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்

அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு சரியான வடிவத்தில் கோப்புகளை பதிவேற்றிய பிறகு, சமர்ப்பி விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

படி 7: குறிப்பு எண்ணைப் பெறுதல் (Reference Number)

படிவத்தை சமர்ப்பித்ததும், விண்ணப்பதாரருக்கு குறிப்பு எண் வழங்கப்படும். இந்த எண் ரேஷன் கார்டின் நிலையை சரிபார்க்க உதவியாக இருக்கும்.

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் மாற்றங்கள் செய்வது எப்படி?

படி 1: இணையதளத்தில் உள்நுழையவும்

விண்ணப்பதாரர் தமிழ்நாடு பொது விநியோக அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.tnpds.gov.in ஐப் பார்வையிட்டு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

படி 2: விவரங்களின் திருத்தம் என்பதைக் கிளிக் செய்யவும்

Correct Your Smart Card பிரிவின் கீழ் உள்ள Correction of Details என்பதை விண்ணப்பதாரர் கிளிக் செய்ய வேண்டும்.

படி 3: பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்

விண்ணப்பதாரர் திருத்தப் படிவத்தைத் திறக்க பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

படி 4: OTP ஐ உள்ளிடுதல்

மொபைல் எண்ணுக்கு ஒரு OPT அனுப்பப்படும், மேலும் OTP ஐ உள்ளிட்ட பிறகு, தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.

படி 5: புகைப்படத்தை பதிவேற்றல்

அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, விண்ணப்பதாரர் குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். 10 KB அளவுக்குக் குறைவான png, gif, jpeg, jpg அளவில் புகைப்படம் இருக்கலாம்.

படி 6: குறிப்பு எண்ணைப் பெறுதல் (Reference Number)

படிவத்தை சமர்ப்பித்ததும், விண்ணப்பதாரருக்கு குறிப்பு எண் வழங்கப்படும். இந்த எண் ரேஷன் கார்டின் நிலையை சரிபார்க்க உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | பென்ஷன் பற்றி இனி நோ டென்ஷன்: மாதா மாதம் 1 லட்சம் ஓய்வூதியம்.. அசத்தும் NPS

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News