ஜோதிடத்தில், கிரகங்களின் மாற்றம், உதயம், அஸ்தங்கம், மற்றும் வக்ரம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒன்பது கிரகங்களிலும் வெவ்வேறு கால இடைவெளியில் ராசி மாறுகிறது. இவை அனைத்திலும், ஜோதிட சாஸ்திரத்தில் சனி கிரகத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தின் படி சனி கிரகம் கர்மவினை அளிப்பவர்.
அந்தவகையில் ஜூன் 5-ம் தேதி சனி பெயர்ச்சி தொடங்கும். சனியின் வக்ர இயக்கம் ஜூன் 05 ஆம் தேதி 03:16க்கு தொடங்கும். இதற்குப் பிறகு அக்டோபர் 23-ஆம் தேதி வரை சனி கும்ப ராசியில் வக்ர நிலையில் இருப்பார். மேலும் ஏப்ரல் 29ம் தேதி சனிபகவான் ராசி மாறினார். மீண்டும், ஜூலை 12 ஆம் தேதி சனி பகவான் தனது ராசியை மாற்றுகிறார். ஏப்ரல் 29ம் தேதி மகர ராசிக்கு பிரவேசித்த சனி பகவான், தற்போது மீண்டும் ஜூலை 12ம் தேதி மகர ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். இங்கு சனி பகவான் ஜனவரி 17, 2023 வரை இருப்பார்.
மேலும் படிக்க | மே மாததின் கடைசி வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்
இந்த வழியில், சனி மொத்தம் 141 நாட்களுக்கு வக்ர நிலையில் இருக்கும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த பெயர்ச்சி சிலருக்கு சாதகமாக இருந்தால், சிலருக்கு அசுபமாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. நான்கு ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக சிறப்பான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
ஜூன் 5 ஆம் தேதி, சனி கிரகம் மேஷத்தின் பதினொன்றாம் வீட்டில் வக்ர நிலையில் பயணிக்க போகிறது. சனியின் இந்த இயக்கம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையும் முன்னேற்றம் காணும். வருமானம் உயரவும் வாய்ப்பு உண்டு. உங்கள் விருப்பங்களில் ஏதேனும் நிறைவேறாமல் இருந்தால், இந்த நேரத்தில் அது நிச்சயமாக நிறைவேறும்.
விருச்சிகம்
ஜூன் 5 ஆம் தேதி, சனி கிரகம் விருச்சிகத்தின் நான்காவது வீட்டில் வக்ர நிலையில் இருக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் இந்த நேரம் நிதி வாழ்க்கையின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் பல சிறந்த முடிவுகளைப் பெற வாய்ப்பு உள்ளது. சில நல்ல செய்திகளையும் பெறலாம். விருச்சிக ராசிக்காரர்கள் கடினமாக உழைத்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
மகரம்
ஜூன் 5 ஆம் தேதி சனி பகவான் உங்கள் இரண்டாவது வீட்டில் அதாவது குடும்ப இடத்தில் வக்ர நிலையில் இருப்பார். இந்த காலகட்டத்தில் மகர ராசிக்காரர்களுக்கு சுகபோகங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் சிரமப்பட்டு வந்திருந்தால், விரைவில் அதிலிருந்து விடுபடுவீர்கள். கௌரவமும் உயரும். போட்டித் தேர்வை எழுதினால், அதிலும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார முன்னேற்றத்திற்கும் வாய்ப்பு உண்டு.
கும்பம்
ஜூன் 5 ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் இருக்கிறார். சனியின் இந்த சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சாதகமாக அமையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR