லிங்கம் என்பது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனைக் குறிக்கும் ஒரு வடிவம் ஆகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலைகளான அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர்.
லிங்கம் என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாகும். லிங்க வடிவம், ஆண்குறியைக் குறிப்பதாகவும், வளம் என்பதற்கான குறியீடாக இது கொள்ளப்பட்டுப் பழங்காலத்தில் வழிபடப்பட்டு வந்ததாகவும் பொதுவாகக் கருதப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதற்குப் பல பொருள்கள் உள்ளதாகத் தெரிகிறது.
'லிம்' என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும்.'கம்' என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும்.உயிர்கள் தோன்றவும்,ஒடுங்கவும் உரிய இடமாக சிவன் உள்ளதால் இப்பெயர் ஆகும்.
பஞ்சபூதங்கள், சிவனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இறக்கையின் தத்ரூபமே இந்த பஞ்சபூதங்கள். அவை, ஆகாயம், காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகும். அந்த வகையில் சிவனுக்கு தொடர்பு கொண்ட தென்னிந்தியாவில் பஞ்சபூத லிங்கத்தின் கோவிலில் உள்ளன. அவை,
> காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ( ப்ரித்திவி லிங்கம் ) - பூமி ( தமிழ்நாடு )
> திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் ( ஜம்பு லிங்கம் ) - நீர் ( தமிழ்நாடு )
> திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ( அக்னி லிங்கம் ) - தீ ( தமிழ்நாடு )
> திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் ( வாயு லிங்கம் ) - காற்று ( ஆந்திரப் பிரதேசம் )
> சிதம்பரம் நடராசர் கோயில் ( அகாச லிங்கம் ) - ஆகாயம் ( தமிழ்நாடு )