Foods That Increases The Risk Of Heart Attack: கடந்த சில காலங்களாக, மாரடைப்பு சம்பந்தமான செய்திகளை அதிகம் கேட்கிறோம். அதிலும் மிக இளம் வயதிலேயே பலர் மாரடைப்புக்கு பலியாகும் செய்திகள் நம்மை அதிர்ச்சியில் ஏற்படுத்துகின்றன. இதற்கான மிக முக்கிய காரணம், நம் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை என என்று மருத்துவர்கள் எச்சரிகின்றனர். மாரடைப்பு பாதிப்பு நமக்கு ஏற்படாமல் தடுக்க, பல வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான், சரியான உணவு தேர்வு.
இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது மிகவும் முக்கியம். மாரடைப்புக்கு காரணம் இதய தமனிகளில் சேரும் அதிக கொலஸ்ட்ரால், கொழுப்பு. சில நேரங்களில் கொழுப்பு உறைந்து நரம்புகளில் இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. இதனால், உடலின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தத்தையும் ஆக்ஸிஜனைக் கடத்தும் பணி பாதிக்கப்படுகிறது. இரத்த ஓட்டம் தடைபடுவதால், மாரடைப்பு ஏற்படுகிறது.
நமது பழக்கவழக்கங்கள் இதயத்தை பலவீனப்படுத்துகின்றன (Heart Health). நாம் சரியான உணவை தேர்வு செய்யாவிட்டால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ், இதயத்தின் எதிரிகள் என்று அழைக்கப்படும் சில உணவுகள் எவை என்பதை எடுத்துக் கூறுகிறார். இவற்றை எப்போதாவது சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், இவற்றை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால், மாரடைப்பு அபாயம் பெருமளவு அதிகரிக்கிறது
இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள்
சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகள்
ஐஸ்க்ரிம், கேக் மற்றும் இனிப்பு வகைகள் போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. இது கொலஸ்ட்ராலை அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் பாதிக்கும்
சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சி புரதத்தின் வளமான ஆதாரம் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அதை அதிகமாக சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும், எனவே அதன் அளவைக் குறைப்பது முக்கியம்.
குளிர் பானங்கள்
குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் சோடா சேர்த்த குளிர் பானங்களையும், செயற்கை பானங்களையும் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள். ஆனால் அதில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் உள்ளது. இது இதய நோயை ஏற்படுத்தும்.
பொரித்த உணவுகள்
பொரித்த உணவு உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அதில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது, இது கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | வாரம் ஒருமுறை அவகாடோ ஜூஸ் குடிங்க... உடம்பு முழுக்க ஊட்டச்சேத்து சேரும்!
உப்பு நிறைந்த உணவுகள்
சிப்ஸ் மற்றும் பிரஞ்சு பிரைஸ் உள்ளிட்ட பல உணவுகளில் அதிக அளவு உப்பு உள்ளது. சோடியம் அதிகம் உள்ள இவற்றை தினமும் உட்கொண்டால் இரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பை உண்டாக்கும்.
மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும். அவரது அனைத்து ஆலோசனைகளைபின்பற்றவும். உணவில் மாற்றங்களைச் செய்வதும் அவசியம். . மேலும் கொல்ஸ்ட்ராலை எரிக்கும் உணவுகளை டயட்டில் தவறாமல் சேர்த்துக் கொள்வதால், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். நல்ல தூக்கமும்ம் மிக அவசியம். அதோடு, உங்களால முடிந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்வதன் மூலம் மாரடைப்பு அபாயத்தை பெறுமளவு குறைக்கலாம்
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கண் பார்வை கூர்மைக்கு... டயட்டில் இந்த உணவுகளை கண்டிப்பாக சேருங்க...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ