தேங்காய் சர்க்கரை Vs வெள்ளை சர்க்கரை.... உடலுக்கு எது சிறந்தது... நிபுணர்கள் கூறுவது என்ன?

Coconut sugar Vs White Sugar: பலர் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஒரு மாற்று பொருளை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகின்றனர். அந்த வகையில் தேங்காய் பனை சர்க்கரை நமக்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 11, 2024, 03:25 PM IST
  • தேங்காய் பனை சர்க்கரை வெள்ளை சர்க்கரையை விட எந்த வகையில் சிறந்தது?
  • தேங்காய் பனை சர்க்கரையின் நன்மைகள்.
  • தேங்காய் சர்க்கரை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது.
தேங்காய் சர்க்கரை Vs வெள்ளை சர்க்கரை.... உடலுக்கு எது சிறந்தது... நிபுணர்கள் கூறுவது என்ன? title=

Coconut sugar Vs White Sugar: நம்மில் பெரும்பாலனோர் அதிகம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரை ஆரோக்கியத்திற்கு எதிரியாக கருதப்படுகிறது. ஏனெனில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் நன்மைகளை விட தீமைகளே அதிகம். ஏனெனில், இதில் உள்ளதெல்லாம் கலோரி மட்டுமே. ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. இதனால் நீரிழிவு, உடல் பருமன், இதய நோய்கள் உட்பட பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. 

தற்போது ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள சூழ்நிலையில் பலர் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக ஒரு மாற்று பொருளை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகின்றனர். அந்த வகையில் தேங்காய் பனை சர்க்கரை நமக்கு ஏராளமான நன்மைகளை தரக் கூடியது என நிபுணர்கள் கூறுகின்றனர். தோற்றத்தில் பழுப்பு நிறத்தில் இருக்கும் தேங்காய் பனை சர்க்கரை வெள்ளை சர்க்கரையை விட எந்த வகையில் சிறந்தது (Health Tips) என்று ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் கூறுவதை தெரிந்து கொள்வோம்.

தென்னம் பூ மொட்டுகளின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை இனிப்பான, தேங்காய் சர்க்கரை (Coconut Sugar ), தேங்காய் பனை சர்க்கரை (Coconut Palm Sugar) என்றும் அழைக்கப்படுகிறது. தேங்காய்ச் சர்க்கரையை உருவாக்கும் செயல்முறை மற்ற வகை சர்க்கரையின் உற்பத்தியைப் போன்றது என்றாலும், குறைந்தபட்சமாக பதப்படுத்தப்படுவதால், சத்துக்கள் ஓரளவுக்கு இழக்காமல் இருக்கிறது. இது லேசான கேரமல் சுவை மற்றும் பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

தேங்காய் பனை சர்க்கரையின் நன்மைகள்

1. ஊட்டசத்துக்கள் நிறைந்தது

தேங்காய் சர்க்கரை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது. இதில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்களின் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், வெள்ளை சர்க்கரையை விட தேங்காய் சர்க்கரை அதிக நுண்ணூட்டச்சத்துக்களை வழங்குகிறது. நீங்கள் இதனை பயன்படுத்துவது ஒப்பீட்டளவில் நல்லது தான் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்

2. கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு குறைவு

தேங்காய் சர்க்கரை வெள்ளை சர்க்கரையை விட குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சர்க்கரையை போல அதிகரிக்காது. நீரிழிவு நோயாளிகளைத் தவிர, மற்றவர்களும் வெள்ளை சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்றாக இதனை பயன்படுத்தினால், நீரிழிவு அபாயத்தை பெருமளவில் குறைக்கலாம்.

மேலும் படிக்க | வாரம் ஒருமுறை அவகாடோ ஜூஸ் குடிங்க... உடம்பு முழுக்க ஊட்டச்சேத்து சேரும்!

3. இயற்கையான இனிப்பு சுவை

தேங்காய் சர்க்கரை சுவை, கேரமல் சுவையை ஒத்துள்ளது. சமையல் தயாரிப்புகளில் வழக்கமான சர்க்கரைக்கு இது சிறந்த மாற்றாக இருக்கலாம். பல இனிப்பு உணவுகள் மற்றும் பானங்களை தயார் செய்யலாம்.

தேங்காய் சர்க்க்ரையை பயன்படுத்தும் போது, மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

இருப்பினும், தேங்காய் சர்க்கரை இன்னும் ஒரு வகையான சர்க்கரை என்பதை நீரிழிவு நோயாளிகள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், எந்த விதமான சர்க்கரையையும் அளவிற்கு அதிகமாக உட்கொள்வது உடல் எடை அதிகரிப்பு, இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல், பல் சிதைவு மற்றும் பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கண் பார்வை கூர்மைக்கு... டயட்டில் இந்த உணவுகளை கண்டிப்பாக சேருங்க...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News