Cooking Oils: நம் அனைவரது வீடுகளிலும் சமையலுக்கு எண்ணெயை பயன்படுத்துகிறோம். சமையலுக்கு இன்றியமையாத பொருட்களில் சமையல் எண்ணெயும் ஒன்று. வறுத்தல், பொரித்தல், வதக்குதல், தாளிப்பு என பெரும்பாலும்m அனைத்து வகையான உணவுகளை தயார் செய்யவும் எண்ணெய் பயன்படுகின்றது. சந்தைகளில் பல வித எண்ணெய் வகைகள் கிடைக்கின்றன. இவற்றில் எதை தேர்வு செய்வது? எது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சமையல் எண்ணெய்
சமையலுக்கு பயன்படும் பல எண்ணெய் வகைகள் உள்ளன. ஆனால் இவற்றில் ஆரோக்கியமான எண்ணெய் எது என்ற கேள்வி பலரிடம் உள்ளது. உடல் ஆரோக்கியமாக இருக்க நாம் உணவில் குறைந்த அளவிலேயே எண்ணெயை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒப்பீட்டளவில் சில எண்ணெய் வகைகள் மற்றவற்றை விட ஆரோக்கியமானவையாக கருதப்படுகின்றன. நீங்கள் சமைக்கும் உணவிற்கு ஏற்றவாறு எண்ணெயை தேர்ந்தெடுப்பதும் அவசியமாகும். உடல் ஆரோகியத்திற்கு ஏற்ற சில எண்ணெய் வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆரோக்கியமான சமையல் எண்ணெய் வகைகள்
இது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா (Nutritionist Lovneet Batra) தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் தனது கருத்தை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டுள்ளார். சமையலறையில் அனைவரும் பயன்படுத்த வேண்டிய 3 ஆரோக்கியமான சமையல் எண்ணெய் வகைகள் பற்றி அவர் கூறியுள்ளார். அவர் தனது பதிவில், “எந்த ஒரு எண்ணெயையும் முற்றிலும் சரியான எண்ணெய் என கூற முடியாது. உங்கள் சமையலறையில் பல்வேறு வகையான சமையல் எண்ணெய் வகைகளை பயன்படுத்துவது முக்கியம்" என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | மழை காலத்தில் பரவும் பயங்கர நோய்கள்... குழந்தைகளை காக்கும் இந்த 5 உணவுகள்!
3 ஆரோக்கியமான எண்ணெய் வகைகள்:
- எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் (Extra Virgin Olive Oil)
மத்திய தரைக்கடல் உணவு வகைகளை அதிகம் உட்கொள்பவர்கள் பெரும்பாலும் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். ஆலிவ் எண்ணெயில் பாலிபினால்கள் மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆண்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. இவற்றின் உதவியால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறைகின்றது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பொதுவாகவே பல வகையான நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. குளிர்ச்சியான உணவு வகைகளில் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- கடுகு எண்ணெய் (Mustard Oil)
கடுகு எண்ணெயில் அதிக அளவு மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. வட இந்தியாவில் பெரும்பாலும் கடுகு எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகின்றது. கடுகு எண்ணெயை தாளிக்கவோ அல்லது பொரியல் போன்றவற்றை செய்யவோ பயன்படுத்தலாம்.
- பசு நெய் (Cow Ghee)
பசு நெய்யில் சமைப்பதும் மிக நல்லதாக கருதப்படுகின்றது. நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலத்தின் அதிக செறிவு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளர உதவுகின்றது. உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் நெய் உதவுகிறது. இதைத் தவிர வறுக்கவும் இதை பயன்படுத்தலாம் என லவ்னீத் பத்ரா கூறுகிறார்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வயிற்றுப்போக்கை நிறுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ