Beat the Heat: கோடை வெயிலை கூலாக்கி சூரியனுக்கே சேலஞ்ச் விடும் T-Shirt AC

சூரியன் உக்ரமாய் வாட்டினால் என்ன? ஆடையில் வைத்துக் கொள்ளும் போர்ட்டபிள் ஏசி இருக்கும்போது வெயில் என்ன செய்யும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 28, 2022, 01:17 PM IST
  • குளுகுளு சம்மரை அனுபவித்துண்டா
  • இதோ இருக்கே போர்ட்டபிள் ஏசி
  • ஆடையில் ஏசி பொருத்தினால் சூரியனும் நமக்கு நண்பன்
Beat the Heat: கோடை வெயிலை கூலாக்கி சூரியனுக்கே சேலஞ்ச் விடும் T-Shirt AC title=

கோடைக்காலத்தில் அக்னி வெயிலின் தாக்கம் வாட்டி வதைக்கிறது. வீட்டிற்குள்ளும் அலுவலகத்திற்கும் இருக்கும்போது குளிர்சாதன பெட்டி கூலாக இருக்க உதவுகிறது.

ஆனால் உச்சி வெயிலில் நடந்தாலும் கூலாக இருக்க செலவு குறைவான ஏசி இருந்தால் எப்படி இருக்கும்? கவலையே வேண்டாம்... இருக்கவே இருக்கிறது டீஷர்ட் ஏசி.

இந்த 'ஷார்ட்டி' ஏசியை டி-ஷர்ட்டில் ஒட்டிக்கொண்டால், கொளுத்தும் வெயிலிலும் ஊட்டியில் இருப்பதுபோல குளுகுளுவென இருக்கலாம். வேண்டுமானால் ஸ்வெட்டர் அணிந்து உடலை சூடேற்றிக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ஏசி-யை வாடகைக்கு எடுக்க முடியுமா?

கோடையில் அதிக வெயிலில் சுற்ற வேண்டியவர்களுக்கு இந்த ஷர்ட் ஏசி ஒரு வரப்பிரசாதம்.  

அது மட்டுமல்ல, வீட்டில் ஏசி இல்லாதவர்களும் இந்த சிறப்பு ஏசி சாதனத்தை வாங்கி பயன்படுத்தலாம். இனி எங்கு சென்றாலும் ஏசி இல்லையே என்று கவலையே வேண்டாம். இந்த ஏசி சாதனத்தில் மின்சார கட்டணத்தையும் மிச்சம் பிடிக்கலாம் என்பது மிகவும் சிறப்பான விஷயம்.  

சோனி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு Ryon Pocket Wearable Air Conditioner ஐ அறிமுகப்படுத்தியது. இது கொளுத்தும் வெயிலிலுக்கும் ட்ஃப் ஃபைட் கொடுத்து, உடலை குளிரச் செய்கிறது. 

மேலும் படிக்க | மின்சாரம் இல்லாதபோது ஏசியை பயன்படுத்துவது எப்படி? 

இந்த 'ஷார்ட்டி' ஏசி டி-ஷர்ட்டில் ஒட்டிக்கொண்டால், கொளுத்தும் வெயில் உங்களை குளிர வைக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில் மிகவும் தொந்தரவு செய்யும் வியர்வைக்கு எண்ட் கார்டு போடுகிறது இந்த பிரத்யேக ஷர்ட் ஏசி. தகிக்கும் சூரியன் இனி உங்களை வாட்டி வதைக்கமாட்டார். 

சோனி க்ரவுட் ஃபண்டிங் மூலம் Ryon Pocket Wearable Air Conditioner ஐ அறிமுகப்படுத்தியது. கொளுத்தும் வெயிலிலும் இது சிறந்த குளிர்ச்சியை அளிப்பதாக நிறுவனம் கூறுகிறது.

சோனி ரியான் பாக்கெட் 2
சோனி நிறுவனம் Reon Pocket 2 இல் வியர்வை-புரூபிங்கை மேம்படுத்தியுள்ளது, இது லேசான உடற்பயிற்சி சூழ்நிலைகளுக்கு மிகவும் பொருத்தமானது என்று கூறுகிறது. 

இந்த ஷர்டில் தூசி மற்றும் நீர் படியாது என்என்பது சிறப்பு. இந்த சாதனம் துருப்பிடிக்காமல் இருக்க, நிறுவனம் SUS316L என்ற துருப்பிடிக்காத ஸ்டீலை அதில் சேர்த்துள்ளது.

மேலும் படிக்க | ஏசியில் கூலிங் சரியா வரலையா? இத செய்ங்க

எப்படி உபயோகிப்பது
Reon Pocket 2 ஐ டி-ஷர்ட் அல்லது ஷர்ட்டில் போட்டுவிட்டு வெளியே செல்லும் முன் ஆன் செய்ய வேண்டும். வெளியே வந்தவுடனே அது வேலை செய்யத் தொடங்கும். ஏசியைப் போன்றே செயல்படும் அது, கோடைக் காலத்திலும் அபரிமிதமான குளிர்ச்சியைக் கொடுக்கும். 

இந்த சாதனம், உடலில் வெயிலால் ஏற்படும் வியர்வைக் கூட வராத அளவு உடலை கூலாக் வைத்திருக்கும்.

சோனி ரியான் பாக்கெட் 2 விலை
சோனி ரியான் பாக்கெட் 2 54 மிமீ x 20 மிமீ x 116 மிமீ (WHD) அளவைக் கொண்டுள்ளது. இதன் எடை 92 கிராம், இது அசல் மாடலின் 89 கிராமை விட சற்று அதிகம். இது ஜப்பானில் 14,850 யென்களுக்கு (ரூ. 10,592) கிடைக்கிறது.

மேலும் படிக்க | படுக்கையில் மனைவி செய்த வேலை, கடுப்பான கணவன்: வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News