பிறந்தது 2020! இன்று முதல் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் மக்களே!

2020 என்ற வருடத்தை ஆவணங்களில் முழுதாக எழுத வேண்டும் என்ற எச்சரிக்கை செய்தி பரவி வருகிறது. ஏன் என்று அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

Last Updated : Jan 1, 2020, 09:25 AM IST
பிறந்தது 2020! இன்று முதல் இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் மக்களே! title=

2020 என்ற வருடத்தை ஆவணங்களில் முழுதாக எழுத வேண்டும் என்ற எச்சரிக்கை செய்தி பரவி வருகிறது. ஏன் என்று அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

2020 ஆண்டை உலகமே மிகுந்த ஆவலுடன் வரவேற்றுள்ளது. இன்று புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் புதிய குழப்பம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த புத்தாண்டு ஒரு அபூர்வ ஆண்டு ஆகும். முதல் இரண்டு இலக்கங்கள், அடுத்த இரண்டு இலக்கங்களாகவும் அமைந்துள்ளன. இதே போன்று இனி அமைவதற்கு இன்னும் 101 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 

1-1-2020 என்ற புத்தாண்டு நாளை, 1-1-20 என்று தான் நம்மில் பெரும்பாலானோர் குறிப்பிடுவோம். குறிப்பாக கையெழுத்திட்டு, தேதியை குறிப்பிடுகிறபோது இப்படி சுருக்கமாக குறிப்பிடுவதே நம் அனைவரின் பழக்கம் ஆகும். 

அந்த வகையில் இந்த புத்தாண்டில் ஒரு புதிய குழப்பம் இருக்கிறது. சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றையோ, முக்கிய ஆவணங்களையோ எழுதுகிறபோது 2020 என்ற ஆண்டை 20 என சுருக்கமாக எழுதக்கூடாது.

ஏனென்றால் 20-க்கு பின்னர் வசதிக்கேற்பவோ, தேவைக்கேற்பவோ (முறைகேடாக) 01 முதல் 19 வரை சேர்த்து விட முடியும், இதனால் ஆவண தேதி 20-ம்ஆம் வருடம் என்பதை 2001-ம் வருடம் முதல் 2019-ஆம் வருடம் வரை மாற்றி விட முடியும். எனவே இந்த ஆண்டு முழுவதும் சிரமம் பாராமல் ஆண்டை 20 என சுருக்கமாக குறிப்பிடாமல் 2020 என முன்ஜாக்கிரதை உணர்வுடன் எழுத வேண்டும். 

இந்நிலையில் 20க்கு பக்கத்தில் வேண்டிய நம்பர்களை எழுதினால் ஆண்டே மாறிவிடும். அதனால் பல சிக்கல்கள், குழப்பங்கள் எழும். எனவே ஆண்டை எங்கு எழுதினாலும் 2020 என்று முழுமையாக எழுத வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. 
 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News