செல்லப்பிராணி வாங்க ஆசையா... கடிக்கவே கடிக்காதாம் - கியூட்டான 10 நாய் இனங்கள்!

வீட்டில் குழந்தைகளுடன் விளையாட செல்லமாக ஒரு நாய் குட்டி வாங்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தால், இங்கே கொடுக்கப்பட்ட 10 நாய்கள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 25, 2023, 03:59 PM IST
  • நாய்கள் கடிப்பது இயல்புதான்.
  • நாய்களை வளர்ப்பதை பொறுத்தே அது கடிக்குமா, கடிக்காதா என்பது தெரியும்.
  • நாய்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கும்.
செல்லப்பிராணி வாங்க ஆசையா... கடிக்கவே கடிக்காதாம் - கியூட்டான 10 நாய் இனங்கள்! title=

நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என அறியப்படுகிறது. மனிதனுக்கும், நாய்க்குமான பழக்கம் எப்போதும் நம் நாகரீகத்தில் நிலைத்திருக்கும். நாய்கள் நமது விசுவாசமான தோழர்கள், அபிமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மிகச்சிறந்த பாதுகாவலர்களாக உள்ளனர். 

சில நாய்கள் பாதுகாவலருக்கான நாய்களாக இருந்தாலும் மற்ற பெரும்பாலாவை மிக மிக நட்பானவை, அன்பானவை மற்றும் குடும்பங்களுக்கு மிகவும் ஏற்றவை. குறிப்பாக குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் இருக்கும் இடங்களில் மிக உதவிகரமாகவும் இருக்கும். இங்கே 10 நாய் இனங்கள் குறித்து காணலாம். இவை மிகவும் மென்மையானவை மற்றும் கடிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. சில இந்தியாவில் எளிதாகக் கிடைத்தாலும், அவற்றில் ஒன்றிரண்டு அரிதானவை. 

லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ் (Labrador Retrievers)

விசுவாசமான மற்றும் மென்மையான, லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ் மிகவும் நட்பான நாய்குட்டிகளில் ஒன்றாகும். இது குழந்தைகளுடன் இருக்கும் குடும்பத்திற்கு ஏற்றது. அவை மிகவும் நிலையான மனநிலை கொண்டவை என்பதால் குடும்பங்களுக்கு இது கூடுதல் பிளஸ்.

புல்டாக்ஸ் (Bulldogs)

அதன் மூர்க்கமான தோற்றம் காரணமாக இந்த நாய் வகைகளை பெரும்பாலானோர் தவறாக மதிப்பிடுகிறீர்கள். அவை அப்படியானது இல்லை. இவற்றின் கடுமையான வெளிப்புறத் தோற்றத்திற்கு பின்னால் ஒரு அமைதியான குணம் உள்ளது.  புல்டாக்ஸ் உண்மையில் மென்மையானது மற்றும் அன்பான குணம் கொண்டது.

கோல்டன் ரெட்ரீவர்ஸ் (Golden Retrievers)

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவை, கோல்டன் ரெட்ரீவர்ஸ்.  இவை மக்களை சார்ந்தவை. கோல்டன் ரெட்ரீவர்ஸ், குடும்பங்களுக்கு ஏற்ற மற்றொரு நட்பான நாய் இனம் ஆகும். மிகவும் அபிமானம் உள்ள மற்றும் விளையாட்டுத்தனமான, இந்த நாய் உங்களை சுற்றி இருந்தால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

பாக்ஸர்ஸ் (Boxers)

அவற்றின் பெரிய அளவு மற்றும் கடுமையான தோற்றத்தால் நீங்கள் பயப்பட வேண்டாம். பொறுமையாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருப்பவைதான் இந்த பாக்ஸர்ஸ். அவர்கள் கடிக்க வாய்ப்பில்லை மற்றும் குடும்பங்களைச் சுற்றி இருப்பதற்கு அற்புதமான ஒன்றாகும்.

பிரெஞ்சு புல்டாக் (French Bulldog)

புல்டாக் நாய் இனத்தின் உறவினர். அளவில் சிறியவை, எளிமையானவை, ஆர்பாட்டம் இல்லாதவை. அவர்கள் பிடிவாதமாக இருக்கலாம், ஆனால் உங்களைப் பார்த்து தாக்க மாட்டார்கள். குறைந்தபட்சம், அதை உங்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை. மிகவும் சுறுசுறுப்பானவை.

பீகிள் (Beagle)

பீகிள்கள் குறும்புத்தனமானவை. நீங்கள் வாங்கிய புதிய காலணிகளை மென்று கூட சாப்பிட்டு விடும். ஆனால் அவை அன்பான, மகிழ்ச்சியான நாய்கள். அவை சிறந்த தோழர்களை ஏற்படுத்திக்கொள்ளும். மேலும் அவர்களுக்கு கொஞ்சம் பயிற்சி தேவைப்படும். குடும்பத்திற்கான சிறந்த நாய்.

மேலும் படிங்க | பிரௌனி நாயை காணவில்லை... மனதை உருக்கும் மதுரை போஸ்டர்...

கிரேட் டேன் (Great Dane)

அவற்றின் உருவம் உங்களை அச்சுறுத்தலாம். சிறியதாக இருந்தாலும், கிரேட் டேன் மிகச்சிறந்தவை.  பெரும்பாலும் மென்மையான ராட்ச்சன்களாகக் அறியப்படும் இந்த நாய்கள், அவற்றின் இலகுவான குணம் மற்றும் பாசமான இயல்புக்கு பெயர் பெற்றவை.

பக்ஸ் (Pugs)

எளிமையான மற்றும் நிலையான குணமுடைய, பக்ஸ் சிறிய நாய்களாகும். அவை பொதுவாக குணமில்லாதவை என கூறப்படுகிறது. இது பல சிறிய வகை நாய் இனங்களில் உண்மையாகதான் இருக்கிறது. இந்த கியூட்டான நாயை வாங்கி, அவர்களை குழந்தைகளுடன் நட்பாகி விளையாடுவதை பார்த்தால் உங்களுக்கு அதன் இயல்பு புரிந்துவிடும். 

விப்பேட் (Wippet)

இந்தியாவில் இது அரிதானது. விப்பேட்கள் மிகவும் சோம்பேறிகள் என அறியப்படுகிறது. ஒருவரைக் கடிக்க இது முயற்சி செய்ய வாய்ப்பே இல்லை என தெரிகிறது. அவர்களை உடற்பயிற்சி செய்ய வைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் அவை உங்கள் படுக்கைகளிலேயே இருந்து, உருளைக்கிழங்குகளாக மாறிவிடும்.

நியூஃபவுண்ட்லாந்து (Newfoundland)

நியூஃபவுண்ட்லேண்ட் முதலில் இனப்பெருக்கம் செய்யப்பட்டு, நியூஃபவுண்ட்லாந்தில் (நவீன கனேடிய மாகாணத்தின் ஒரு பகுதி) மீனவர்களுக்கு வேலை செய்யும் நாய்களாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த நாய்கள் இந்தியாவில் அரிதானது. இதன் விலையும் உயர்வுதான். அவை ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம். ராட்சத அளவிலான நாயான இது, நீங்கள் கட்டிப்பிடிக்க விரும்பும் ஒரு அதிக முடிகள் உள்ள பெரிய வகை நாயாகும். ஆனால் அவர்களுக்கு ஆடம்பர கவனிப்புகள் தேவை. ஒருநாளின் பெரும்பகுதி அவற்றை ஏசியில் வைக்க வேண்டும்.

இருப்பினும், மேலே கூறிப்பிட்ட எல்லா நாய்களும், மற்ற விலங்குகளைப் போலவே. இந்த 10 இனங்களும் கடிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். குறிப்பாக அவை தூண்டப்பட்டாலோ, நீங்கள் நாயை எப்படி நடத்துகிறீர்களோ, அவற்றை எப்படி கவனித்துக்கொள்கிறீர்களோ, எப்படி பயிற்சியளிக்கிறீர்களோ அப்படிதான் அது இருக்கும். இவை அனைத்தும் நாயின் குணத்தை தீர்மானிப்பதில் அவசியமானது. 

(பொறுப்பு துறப்பு: கட்டுரை பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. Zee News இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | CCTV Video: 5 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்! கண்ணீர் வரவழைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News