ஒரு ரயில் தயாரிக்க ஆகும் செலவு இத்தனை கோடிகளா? முழு விவரம்

நாள்தோறும் கோடி கணக்கானோர் பயணிக்கும் இந்திய ரயில்வேயில், ஒரு ரயில் உருவாக்க ஆகும் செலவு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா?

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 3, 2022, 03:06 PM IST
  • ரயிலை உருவாக்க கோடிகளை செலவழிக்கும் இந்திய ரயில்வே
  • ஒரு ரயிலில் இருக்கும் ஒரு இன்ஜினின் விலை என்ன தெரியுமா?
ஒரு ரயில் தயாரிக்க ஆகும் செலவு இத்தனை கோடிகளா? முழு விவரம்

ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயில் பயணம் செய்கின்றன. இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பேருந்து, விமான பயணத்தை விட ரயில் பயணத்தையே மக்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர். அலைச்சல் மிக குறைவு மட்டுமல்லாது, பயணத்துக்கான செலவும் மிக மிக குறைவாக இருக்கிறது. இதுவே மக்கள் ரயில் பயணத்தை விரும்பி தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணமும் கூட. இந்நிலையில், ஆயிரக்கணக்கான ரயில்கள் இருக்கும் இந்திய நாட்டில், ஒரு ரயில் உருவாக்க ஆகும் செலவு என்ன என்பது பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. இதோ ஒரு ரயில் உருவாக்க ஆகும் செலவை இங்கே தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க | வீட்டுக்கடன் எளிதில் பெற இந்த முறையை பாலோ பண்ணுங்க!

ரயிலுக்கு எவ்வளவு செலவாகும்?

ரயிலில் மின்சாரம், தண்ணீர், கழிவறை, மின்விசிறி, ஏசி போன்ற அனைத்து வசதிகளும் இருக்கும். இவையனைத்துக்கும் தேவையான கட்டமைப்புடன் தான் ஒரு ரயில் உருவாக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் அதிக செலவு இல்லை. இந்திய ரயில்வேயின் எஞ்சினை உருவாக்க இரண்டு வழிகள் உள்ளன, ஒன்று - மின்சாரம் மற்றும் மற்றொன்று - டீசல். தற்போது இந்தியாவில் 52 சதவீத ரயில்கள் டீசலில் இயங்குகின்றன.

ஒரு இன்ஜினின் விலை ரூ. 20 கோடி 

டூயல் மோட் லோகோமோட்டிவ் ரயிலின் விலை சுமார் ரூ.18 கோடி. அதே சமயம் 4500 ஹெச்பி டீசல் இன்ஜின் விலை சுமார் ரூ.13 கோடி என கூறப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களை விட வசதிகள் குறைவு என்பதால் சாதாரண பயணிகள் ரயிலை உருவாக்க 50 முதல் 60 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டிக்கும் சுமார் 2 கோடி ரூபாய் செலவாகும். இந்த பெட்டிகளின் மொத்த விலை சுமார் 50 கோடி. என்ஜின்கள் 20 கோடி. இரண்டையும் இணைத்து ரூ.70 கோடி மதிப்பில் எக்ஸ்பிரஸ் ரயில் தயாராகிறது. இருப்பினும், வசதிகளுக்கு ஏற்ப அவற்றின் விலை மாறுபடும். ஜெனரல் மற்றும் ஸ்லீப்பருடன் ஒப்பிடும்போது ஏசி பெட்டிகள் விலை அதிகம்.

மேலும் படிக்க | தீபாவளிக்கு பிறகு இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி மழை பொழியும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News