திருடவந்த இடத்தில் பாட்டிக்கு லிப்லாக் கொடுத்த கொள்ளைக்காரன்!

இல்லபட்டி உங்க காசு எனக்கு வேண்டாம்; பாட்டிக்கு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்திய கொள்ளைக்காரன்..!

Updated: Oct 19, 2019, 03:09 PM IST
திருடவந்த இடத்தில் பாட்டிக்கு லிப்லாக் கொடுத்த கொள்ளைக்காரன்!

இல்லபட்டி உங்க காசு எனக்கு வேண்டாம்; பாட்டிக்கு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்திய கொள்ளைக்காரன்..!

இந்த உலகில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் நடந்து வருகிறது. குறைந்தது ஒரு நாளைக்கு 10 கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக ஆய்வு கூறுகிறது. சிறியவர், பெரியவர் என பாராமல் தெருக்களில் செல்பவர்களின் நகைகளை பறித்து செல்லும் சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், கடையில் கொள்ளையடிக்கும் திருடர் ஒருவர் மூதாட்டிக்கு முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்திய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வடகிழக்கு பிரேசிலில் உள்ள அமரன்டேவில் மருந்துக்கடை ஒன்றுக்கு கைகளில் துப்பாக்கியுடன் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர். முகத்தை ஹெல்மெட்டால் மூடியிருந்தனர். கடைக்குள் இருந்தவர்கள் இவர்களை பார்த்ததும் கைகளை உயர்த்தினர். ஒரு கொள்ளையன், கல்லாவில் இருந்த ஆயிரம் டாலரையும் சில பொருட்களையும் கொள்ளையடித்தான்.

அப்போது, அருகில் இருந்த மூதாட்டி ஒருவர் நடுங்கும் கைகளில், தன்னிடமிருந்த பணத்தை அங்கு நின்றிருந்த மற்றொரு கொள்ளையனிடம் கொடுத்தார். அதை அன்போடு நிராகரித்த அந்த துப்பாக்கிக் கொள்ளையன், இல்லம்மா, நீங்க சும்மாருங்க. உங்க பணம் வேண்டாம் என்று கூறிவிட்டு, அவர் நெற்றியில்; முத்தமிட்டார். 
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சென்டிமென்ட் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.