ஆயுள் காப்பீட்டு திட்டம் எடுக்க போறீங்களா? இத கவனத்துல வச்சுக்கோங்க!

ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் வரியைச் சேமிக்க உதவுவதுடன், உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி ஒருவரின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி.  

Written by - RK Spark | Last Updated : Jul 4, 2022, 08:44 AM IST
  • ஆயுள் காப்பீட்டின் முக்கிய நோக்கம் வரிச் சேமிப்பு அல்ல.
  • இதன் முக்கிய நோக்கம் ஒருவரது பாதுகாப்பு தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
  • இதனை கவனத்தில் வைத்துக்கொண்டு மட்டும் ஒருவர் பாலிசி போடக்கூடாது.
ஆயுள் காப்பீட்டு திட்டம் எடுக்க போறீங்களா? இத கவனத்துல வச்சுக்கோங்க!

ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் வரியைச் சேமிக்க உதவுவதுடன், உங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி ஒருவரின் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி.  ஆயுள் காப்பீடு பாலிசிதாரரின் மரணத்திற்கு பின்னர் அவர்களது குடும்பத்திற்கு நிதி உதவியாக செயல்படுகிறது. காப்பீட்டாளரால் செய்யப்பட்ட நாமினி, பாலிசியின்படி காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள்.  இதனை கவனத்தில் வைத்துக்கொண்டு மட்டும் ஒருவர் பாலிசி போடக்கூடாது ஆயுள் காப்பீட்டுக் கொள்கையைத் தேர்ந்தெடுக்கும்போது ஒருவர் மேலும் சில முக்கியமான விஷயங்களை நினைவில் கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க | Education Loan: பெற்றோர்களின் கவனத்திற்கு; உங்கள் பிள்ளைகளுக்கு சிக்கல்

ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கு செலுத்தப்படும் பிரீமியங்கள் பிரிவு 80சி இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு பெற தகுதியுடையதாக இருப்பதால், பலர் அதை ஒரு வரி சேமிப்பு கருவியாக மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் ஆயுள் காப்பீட்டின் முக்கிய நோக்கம் வரிச் சேமிப்பு அல்ல, இதன் முக்கிய நோக்கம் ஒருவரது பாதுகாப்பு தான்.  இந்தத் திட்டங்கள் பாலிசிதாரர் திடீரென்று மரணம் அடைந்தால் அவரைச் சார்ந்துள்ளவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  பிரீமியங்கள் குறைவாக இருப்பதால் லைஃப் கவர் வாங்குவதில் நன்மைகள் உள்ளன.  இருப்பினும் எந்த பாலிசியை வாங்குவது என்பதைத் தேர்ந்தெடுப்பது அவசியமானதாகும். 

உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும் போது மற்றும் பிரீமியங்கள் குறைவாக இருக்கும்போது, ​​சிறு வயதிலேயே ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை வாங்குவதே சிறந்த முறையாகும்.  தாமதமாகத் தொடங்குவது என்பது உங்கள் குடும்பத்தின் சாத்தியமான செலவுகளை ஈடுசெய்யக்கூடிய அதிக கவரேஜ் கொண்ட திட்டத்தை வாங்குவதைக் குறிக்கும், இதனால் அதிக பிரீமியம் செலுத்த நேரிடும்.  ஆயுள் காப்பீடு என்பது நீங்கள் செய்யும் 5 நிமிட முதலீடு அல்ல.  உங்கள் கடன்கள், வயது, உங்கள் குழந்தைகளின் உயர்கல்வி அல்லது திருமணத் திட்டங்கள், பணவீக்கம் போன்ற பல விஷயங்களின் காரணியாக இருக்க வேண்டும்.  பாலிசி வாங்குபவர் சரியான காப்பீட்டுத் தொகையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் இந்தக் குறிப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: FD விகிதங்களை உயர்த்தியது வங்கி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News