திருப்பதிக்கு போறீங்களா? ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று இணையத்தில் வெளியீடு

திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் நற்செய்தி அறிவித்து, சிறப்பு தரிசன ஒதுக்கீட்டை வெளியிடும்...

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 24, 2024, 11:30 AM IST
  • சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 300 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
  • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான முன்னுரிமை.
  • திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி.
திருப்பதிக்கு போறீங்களா? ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று இணையத்தில் வெளியீடு title=

திருப்பதி ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்: திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அதன்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களையும் விதமாக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலவச தரிசனம் மட்டுமல்லாது கட்டண தரிசனமும் இருக்கிறது. அதுமட்டுமின்றி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆன்லைனிலேயே புக் செய்து கொள்ள முடியும். 

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் குறித்த நேரத்தில் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ஆன்லைன் டிக்கெட்டுகளை மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் (தமிழ் புத்தாண்டு 2024) வழிபாடு நடத்துவதற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று காலை 10 மணிக்கு முன்பதிவு செய்யலாம், அதுமட்டுமின்றி ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளம் https://tirupatibalaji.ap.gov.in/#/login செய்வதன் மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் (Tirumala Tirupati Devasthanams) தரப்பில் கூறப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | IRCTC: ரயில் தாமதம் ஆயிடுச்சா.. ரீஃபண்ட் குறித்து கவலையே வேண்டாம், இந்திய ரயில்வேயின் புதிய விதி

இதையடுத்து திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு டிக்கெட்கள் நாளை மறுநாள் (ஜனவரி 25) வெளியிடப்பட உள்ளது. இதற்கேற்ப பக்தர்கள் உரிய திட்டமிடல்களை மேற்கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான முன்னுரிமை அடிப்படையிலான தரிசன டோக்கன்கள் நேற்று மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. ஏப்ரல் மாதம் திருமலையில் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை மூலம் சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு தங்களுடைய பெயர்களை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் ஜனவரி 27ஆம் தேதி மதியம் 12 மணி முதல் திருப்பதி மலையில் நடைபெறும் நவநீத சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும், பகல் 1 மணி முதல் உண்டியல் காணிக்கை பணம் கணக்கிடும் பரக்காமணி சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும் தங்கள் பெயர்களை தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.Ap.Gov.in  இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி:
* திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://tirupatibalaji.ap.gov.in/#/login திறக்கவும்.
* இங்கு காத்திருக்க வேண்டிய நேரம் 10 நிமிடங்கள் வரை ஆகலாம்.
* அடுத்து திறக்கும் பக்கத்தில் உங்கள் மொபைல் எண்ணை கொடுக்கவும்.
* கேப்ட்சா குறியீட்டை பெற்றவுடன், அதை உள்ளிடவும்.
* இப்போது ஜெனெரேட் ஓடிபி என்பதை கொடுக்கவும்.
* உங்கள் மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஆறு இலக்க ஓடிபி ஐ உள்ளிட்டு லாகின் கொடுக்கவும்.
* இப்போது உங்கள் காலெண்டர் திறக்கும்.
* அதில் நீங்கள் விரும்பும் தேதிகளை தேர்ந்தெடுக்கவும்.
* அங்கு பச்சை நிறத்திற்கான வண்ணக் குறிப்பு கிடைக்கும். அது காலியாக இருக்கும் இடங்களை குறிக்கிறது.

மேலும் படிக்க | Best Investment Schemes: தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்களா? உங்களுக்கான சேமிப்பு திட்டங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News