செவ்வாய்க்கிழமை ராகு கால துர்கை வழிபாடு முறைகள்!

ராகு காலம் என்பது மூன்றே முக்கால் நாழிகை கொண்டது. ஒரு  நாழிகைக்கு சர்வதேச கால அலகையால் இருபத்து நான்கு நிமிடங்கள். ஒரு மணி நேரத்துக்கு இரண்டரை நாழிகைகள். ஆகவே  மூன்றேமுக்கால் நாழிகை என்பது ஒன்றரை மணி நேரமாகும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 30, 2021, 06:25 AM IST
செவ்வாய்க்கிழமை ராகு கால துர்கை வழிபாடு முறைகள்! title=

ராகு காலத்தில் செய்யப்படும் பூஜைகளில் முக்கியமானது துர்க்கை அம்மன் பூஜை. ராகு கால துர்க்கா பூஜை என்று ஒரு தனி வழிபாட்டு முறையே இருக்கிறது. இதில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செய்யப்படும் முக்கிய பூஜை.

செவ்வாய் (Tuesday), ராகு ஆகிய கிரகங்களால் இடையூறுகள் இருந்தால் செய்யப்படும் பூஜை (Durga Poojai) இந்தப் பூஜை. அதுமட்டுமல்லாது நீண்ட நாட்களாகத்  தடங்கலாக இருந்த காரியங்கள் தொடர்ந்து வில்லங்கமில்லாமல் நடப்பதற்காகவும் செய்யப்படுவது. பெண்களுக்குத் திருமணமாவதற்காகவும்  இதனைச் செய்வார்கள். இதற்கென பூஜை முறைகள் இருக்கிறது.

ஒன்பது வாரங்களுக்கு விரதமிருந்து செய்யப்படுவது இந்தப் பூஜை. எலுமிச்சம்பழத்தை அறுத்து, சாற்றைப் பிழிந்துவிட்டு, அந்த மூடியைப்  திருப்பிப்போட்டு, அதில் நெய்யை ஊற்றி, சிறிய திரியைப்போட்டு, தீபம் வைத்து வழிபடுவது வழக்கம்.

ALSO READ | Devotional: காரியத் தடைகளை போக்கி சித்தி அருளும் விக்ன விநாயகர் வழிபாடு

துர்கை வழிபாடு மந்திரம் பாடல்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி)

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டு வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே (ஜெய ஜெய தேவி)

சங்கு சக்கரமும் வில்லும் அம்பும் மின்னும் வாளும் வேலும் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா…..
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நிற்பாள்
மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும்
அவளே அங்கையர்க்கண்ணியும் அவளே
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்

செவ்வாய்க்கும் ராகுவுக்கும் கிரகப் பதவி கிடைப்பதற்காக அவர்கள் சண்டிகையை வழிபட்டார்கள் என்ற ஐதீகம். முறையே அவர்களுக்குரிய  நாள், நேரம் ஆகியவற்றில் இந்தப் பூஜையைச் செய்தால் காரிய சித்தியும் சண்டிகையின் பேரருளும் கிட்டும் என்ற வரத்தையும் அவ்விருவரும் சண்டிகையிடம் பெற்றார்கள் என்று தேவீ பாகவதம் கூறுகிறது.

ALSO READ | வடக்குத் திசையில் வைத்து குபேரனை வணங்கினால், செல்வ வளம் பெருகுமா?

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News