தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் வித்யாசமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் எவ்வாறு அணுகப்பட்டு வருகிறது என்று பார்ப்போம்!
சீக்கியர்களின் தீபாவளி:-
1577-ல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.
சமணர்களின் தீபாவளி:-
மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.
புத்த மதத்தினரின் தீபாவளி:-
மாமன்னர் அசோகர் புத்த மதத்துக்கு மாறிய நாள், புத்த மதத்தினரால் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளை ‘அசோக விஜயதசமி’ என்று அழைப்பர்.
வட இந்தியா தீபாவளி:-
வட இந்தியாவில் சில இடங்களில் தீபாவளியன்று நரகாசுரனுடைய உருவங்களைக் கொளுத்தி கிருஷ்ண பகவானுடைய வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.
அசோக தீபாவளி:-
சாம்ராட் அசோகர் தன்னுடைய திக் விஜய யாத்திரையை நிறைவு செய்து விட்டு, தனது நாட்டிற்கு திரும்பிய நாள் தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டது. அந்த நாளே தீபாவளி.
மராட்டிய தீபாவளி:-
மராட்டிய மன்னனான வீரச்செயல்களில் சிறப்பு மிக்க சத்ரபதி சிவாஜி, தன்னுடைய விரோதிகளின் கோட்டையை தாக்கி கைப்பற்றிய நாள் தீபாவளி. மராட்டிய பகுதிகளில் இது “தன திரயோதசி”, “தண்டெராஸ்” என்றெல்லாம் சொல்லப்படுகின்றது.
அயோத்தி தீபாவளி:-
ராவண சம்ஹாரம் முடிந்து, ராமன் தன் மனைவி சீதாதேவியுடன் அயோத்தி திரும்பினார். 14 ஆண்டுகளாக ராமரை தரிசிக்க அயோத்தி நகரவாசிகள், அந்த இரவு நேரத்தில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தார்கள். அந்த நாளே தீபாவளி.