உங்கள் Ex கொடுத்த பரிசுகளை தூக்கி குப்பையில் வேண்டும்! ஏன் தெரியுமா?

நம்மை, காதலித்த Ex கொடுத்த பரிசுகளை, நாம் எப்போதும் வைத்துக்கொள்ளவே கூடாது. இது ஏன் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Oct 9, 2024, 04:15 PM IST
  • எக்ஸ் கொடுத்த கிஃப்டை வைத்துக்கொள்ளக்கூடாது!
  • மூவ் ஆன் ஆக முடியாது
  • அந்த கிஃப்டை தூக்கிப்போட காரணம் என்ன?
உங்கள் Ex கொடுத்த பரிசுகளை தூக்கி குப்பையில் வேண்டும்! ஏன் தெரியுமா? title=

அன்பும் காதலும் இல்லையெனில் இந்த உலகம் என்னவாகும் என்றே தெரியாது. நம்மில் பலருக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் கதைகள் இருக்கலாம். இப்படிப்பட்ட காதல்களும், காதலர்களும் இருப்பதில் தவறே இல்லை. ஆனால், அவர்கள் நம் வாழ்வில் இல்லை என்றாலும் பலர் அந்த காதலை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் அவர்கள் கொடுத்த பரிசுகளை அப்படியே வைத்துக்கொண்டிருப்பர். இந்த பரிசுகள், நம்மை மாற்றக்கூடிய வல்லமை படைத்தவையாக இருக்கலாம். எனவே, இந்த பரிசுகளை நம்முடன் வைத்துக்கொள்ள கூடாததற்கான காரணங்களை, இங்கு பார்க்கலாம். 

மூவ் ஆன் ஆக முடியாது:

எந்த ஒரு முடிவும், நல்ல தொடக்கத்திற்கான ஆரம்பம் என சிலர் சொல்லி கேட்டிருப்போம். ஒரு காதல் பிரேக்-அப் ஆன பின்பு, அதிலிருந்து மீண்டு எழுந்து வர நேரமும், காலமும் எடுக்கும். இந்த சமயத்தில் அவரை பார்ப்பதையோ, அவருடன் பேசுவதையோ தவிர்க்க வேண்டும். அவரை நினைவு படுத்தும் விஷயங்கள் கூட, நம் மனதை பாதிப்படைய செய்து, மூவ்-ஆன் ஆக செய்யாமல் தடுக்கும். எனவே, அவர் கொடுத்த பரிசுகளையோ, அவர் சம்பந்தப்பட்ட பொருட்களையோ உங்கள் அருகில் வைத்திருப்பதை தவிர்க்கவும். 

வலியை மறக்க உதவும்: 

உங்கள் முன்னாள் காதலர் கொடுத்த கிஃப்ட்கள், அவருடையை நினைவை உங்களுக்கு தந்து கொண்டே இருப்பதாக இருக்கலாம். அவர் கொடுத்த பரிசுப்பொருட்களை தூக்கி போட்டு ஒழித்துக்கட்டுவது மூலமாக உங்களால் மன வலியை கடக்க முடியும். பிரேக்-அப்புக்கு பிறகு உங்கள் மனதுக்குள் வெறுப்பு, மனக்கசப்பு ஆகியவை உண்டாகியிருக்கலாம். இந்த கிஃப்டை தூக்கிப்போடுவதால் உங்கள் எக்ஸ் பற்றிய நினைவுகளுக்கு குட்-பை சொல்வது போல அது அமையலாம். 

மேலும் படிக்க | உங்களை ஸ்மார்ட் ஆக யோசிக்க வைக்கும் 8 புத்தகங்கள்! கண்டிப்பா படிங்க..

சுய கவனிப்பு:

உங்களை நீங்கள் நன்றாக பார்த்துக்கொள்வது எப்போதும் மிகவும் அவசியம் ஆகும். பிரெக்-அப்பை கடந்து போவது கடினமானதாக தோன்றினாலும், அது உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் ஒரு நல்ல காரியம் ஆகும். இதனால், உங்கள் சுய மரியாதை உயருவதுடன், உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரித்த உணர்வு தோன்றலாம். 

மன்னிப்பு:

ஒரு விஷயத்தை கடந்து செல்ல வேண்டும் என்றால், அதை மன்னித்து மறக்க வேண்டும் என பலர் கூறுவர். பிரேக்-அப் ஆனதற்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். உங்கள் எக்ஸ் கொடுத்த பரிசுகளை தூக்கி போடுவதன் மூலம், நீங்கள் அவரை அல்லது உங்களை மன்னிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதனால், மனதில் இருக்கும் வெறுப்பு அகன்று-புதிய தொடக்கங்களுக்கு இடம் கொடுக்க ஆரம்பிப்பீர்கள். 

புதிய தொடக்கம்: 

நாம் அடுத்த படி ஏற வேண்டும் என்றால், கடந்து வந்த படியை திரும்பி பார்க்காமல் இருக்க வேண்டும். வலிகளை மறக்க, புதிய பயணத்தை தொடங்க கண்டிப்பாக நாம் நமக்கு தேவையற்ற விஷயங்களை தூக்கி குப்பையில் போடுவது அவசியம். அப்படி குப்பையில் போடும் பொருட்களுள் ஒன்று உங்கள் எக்ஸ்-ன் பரிசு பொருட்களாக இருக்கலாம். இப்படி பழைய நினைவுகளை சுமக்காத விஷயங்களை நீங்கள் அருகில் வைத்துக்கொண்டால், கடந்த காலத்தில் வாழாமல் நிகழ் காலத்தில் வாழ்ந்து பழகுவீர்கள். 

மேலும் படிக்க | பெண்கள் தன்னம்பிக்கையை வளர்க்க 8 வழிகள்! செய்து பாருங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News