அமேசான் காட்டுல குளிக்கிற சுகம் வேண்டுமா? பாரம்பரிய 6 குளியல் முறைகள்

Bathing Tips : அமேசான் காட்டில் ஓடும் நீரில் குளிக்கிற அனுபவம் வேண்டும் என நினைப்பவர்கள் உங்கள் குளிக்கிற நீரில் இந்த 6 பொருட்களை சேர்த்து குளிக்கவும். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 13, 2024, 06:37 PM IST
  • பாரம்பரிய 6 வகையான குளியல் முறைகள்
  • அமேசான் காட்டு குளியல் அனுபவம் வீட்டில் கிடைக்கும்
  • நேர்மறை ஆற்றல்கள் உங்களை ஆட்கொள்ளும்
அமேசான் காட்டுல குளிக்கிற சுகம் வேண்டுமா? பாரம்பரிய 6 குளியல் முறைகள் title=

Bathing Tips Tamil : தினமும் இரண்டு நேரமும் குளித்தால் உங்கள் உடலும், மனதும் ஆரோக்கியமாக இருக்கும். பல நீதி நூல்களிலும் குளியலின் முக்கியத்துவத்தைப் பற்றி புலவர் பெருமக்கள் எழுதியிருக்கிறார்கள். வாரம் ஒருமுறை தவறாமல் எண்ணெய் குளியல் போடுவதுடன், தினமும் தவறாமல் இரண்டு வேளைகளிலும் குளித்துவிட வேண்டும் என சித்தர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனையே மருத்துவர்களும் சொல்கிறார்கள். அதனால், உங்களின் குளியல் இனிமையாக இருக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். 

6 வகையான பாரம்பரிய குளியல் முறைகள் : 

1. உப்பு குளியல்

குளிக்கும் நீரில் பழங்காலம் முதல் உப்பு சேர்க்கும் நடைமுறை இருக்கிறது. ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பலன்களைக் கொண்டிருக்கிறது உப்பு குளியல். இது மன அழுக்குகளையும், உடல் அழுக்குகளையும் நீக்குவதாக நம்பிக்கை இருக்கிறது. உப்பு குளியல் தெளிவு, அமைதி மற்றும் பாதுகாப்பு உணர்வை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. எதிர்மறை சக்திகள் உங்களிடம் இருந்து விலகி இருக்கும்.

மேலும் படிக்க | வைட்டமின் B12 நிறைந்த சைவ உணவுகள் இவைதான்! கண்டிப்பா சாப்பிடுங்க!

2. ஏலக்காய் குளியல்

ஏலக்காய் குளியல் உங்கள் வாழ்க்கையில் நல்ல அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரும் என்து நம்பிக்கை. ஏலக்காயை நசுக்கி ஒரு சிறிய மஸ்லின் துணியில் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் ஊற விடவும். தண்ணீர் சிறிது நிறம் மாறி, மணமாக மாறியவுடன், அதைக் கொண்டு குளிக்கத் தொடங்குங்கள்.

3. பால் குளியல்

பால் குளியல் பழங்காலத்திலிருந்தே பின்பற்றப்படும் பழக்கம். பால் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை என்பதால், உங்களின் குளிக்கும் நீரில் 4-6 டேபிள்ஸ்பூன் பாலை சேர்த்து குளிக்கவும். பால் குளியல் தோல் தொடர்பான பிரச்சனைகளை போக்கும் என்பதும் நம்பிக்கை. சிறிது வெதுவெதுப்பான நீரில் பாலை சேர்த்து நன்கு கலக்கவும். சுமார் 20 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் குளிக்கவும்.

4. மஞ்சள் குளியல்

மஞ்சள் சிறந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. பாரம்பரிய கலாச்சாரங்களில், நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சடங்குகளில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் குளியலில் மஞ்சளைச் சேர்ப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலைப் பெறலாம். குளியல் நீரில் மஞ்சள் சேர்த்து, சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.

5. சந்தன குளியல்

ஆடம்பரம், அமைதி, வெற்றி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சந்தனத்தை வைத்தும் குளிக்கலாம். குளியலில் சந்தனத்தைச் சேர்ப்பது உங்கள் மனதை சீராக்கும். மேலும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், உங்கள் இலக்குகளை அடையவதற்கான ஆற்றல்களை சீரமைக்கவும் உதவும். 

6. ரோஜா இதழ் குளியல்

அன்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது ரோஜா. அதன் இதழ்களில் குளியல் மேற்கொள்வதன் மூலம் மனநிலை மேம்படுவதோடு, அன்பு மற்றும் இரக்க உணர்வை இந்த குளியலில் பெறலாம். ரோஜா இதழ்களின் குளியல் சருமத்தை மென்மையாக்க உதவும். அத்துடன் ரோஜா குளியல் அன்பையும் செழிப்பையும் உங்களுக்குள் கொண்டுவரும். 

மேலும் படிக்க | இந்த எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தினால் முடி உதிர்வு குறைந்துவிடும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News