நவம்பர் மாத லக்கி ராசிகள் இவைதான்: நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்

Most Lucky Zodiac Signs of November 2024: நவம்பர் மாதம் ஜோதிட ரீதியாக மிக முக்கியமான மாதமாக பார்க்கபப்டுகின்றது. ஏனெனில், பல பெரிய கிரகங்கள் நவம்பர் மாதத்தில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றவுள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 2, 2024, 05:25 PM IST
  • கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மங்களகரமானதாக அமையப் போகிறது.
  • சனி வக்ர நிவர்த்தி உங்கள் வாழ்வில் சாதகமான பலன்களை கொண்டு வரும்.
  • சனி பகவானின் பரிபூரணம் அருள் கிட்டும்.
நவம்பர் மாத லக்கி ராசிகள் இவைதான்: நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்

Most Lucky Zodiac Signs of November 2024: அக்டோபர் மாதம் முடிந்து நவம்பர் மாதம் தொடங்கிவிட்டது. இந்த மாதம் ஜோதிட ரீதியாக மிக முக்கியமான மாதமாக பார்க்கபப்டுகின்றது. ஏனெனில், பல பெரிய கிரகங்கள் நவம்பர் மாதத்தில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றவுள்ளன. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுகின்றன.

Add Zee News as a Preferred Source

ராசி மற்றும் நட்சத்திரம் தவிர, கிரகங்களின் உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சில ராசிகளுக்கு இவற்றால் சாதகமான பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும். நவம்பர் மாதத்தில் எந்தெந்த கிரகங்கள் தங்கள் ராசி அல்லது நட்சத்திரங்களை மாற்றுகின்றன? இவற்றால் ராசிகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் என்ன? இந்த மாதம் அதிகப்படியான நன்மைகளை பெறவுள்ள ராசிகள் எவை? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 

நவம்பர் 7 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசியை விட்டு தனுசு ராசிக்குள் நுழைகிறார். நீதியின் கடவுளாகக் கருதப்படும் சனி பகவான் தனது ராசியை மாற்றாது நவம்பர் 15-ம் தேதி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். மேலும் நவம்பர் 16 ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரியன் துலாம் ராசியிலிருந்து விலகி விருச்சிக ராசிக்கு நுழைகிறார். நவம்பர் 26 ஆம் தேதி, புதன் விருச்சிக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இந்த வகையில் பல பெரிய கிரகங்கள் நவம்பர் மாதத்தில் தங்கள் ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றவுள்ளன. இதனால் சாதகமான விளைவுகள் ஏற்படவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம். 

ரிஷபம் (Taurus)

நவம்பர் கிரக பெயர்ச்சிகளால் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நவம்பர் மாதம் நிதி நிலை வலுவாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படும். தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அந்த பயணம் மூலம் அனுகூலமான நன்மைகள் ஏற்படும். 

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.... பணம், பதவி, புகழ் அனைத்தும் கிட்டும்

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் முழுவதும் மங்களகரமானதாக இருக்கும். குறைந்த செலவு மற்றும் அதிக வருமானம் காரணமாக, வங்கி இருப்பும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், இந்த மாதம் அதிக லாபம் காணலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பணியால் சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் முழுவதும் மங்களகரமானதாக இருக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

கும்பம் (Aquarius)

கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் மங்களகரமானதாக அமையப் போகிறது.  சனி வக்ர நிவர்த்தி உங்கள் வாழ்வில் சாதகமான பலன்களை கொண்டு வரும். சனி பகவானின் பரிபூரணம் அருள் கிட்டும். நீண்ட நாட்களாக முழுமையடையாமல் நிலுவையில் உள்ள பணிகள் இப்போது நடந்து முடியும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். தொழில் வியாபாரம் பெருகும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டு. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வாழ்வில் பல வெற்றிகள் குவியும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு... செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News