4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி! வீடியோ உள்ளே!

அஞ்சலி மேனன் இயக்கும் `கூடே' படத்தில் ப்ரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

Last Updated : Jun 14, 2018, 03:23 PM IST
4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி! வீடியோ உள்ளே! title=

அஞ்சலி மேனன் இயக்கும் `கூடே' படத்தில் ப்ரித்விராஜ், பார்வதி, நஸ்ரியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு 21ம் தேதி திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது  4 ஆண்டுகள் இடைவேளையைக்கு பிறகு மீண்டும் நடிப்பில் கால் பதித்துள்ளார் நஸ்ரியா. 

முன்னதாக அஞ்சலி மேனன் இயக்கிய `பெங்களூர் டேஸ்’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார் நஸ்ரியா. அந்தப் படத்திற்கு பிறகு தான் ஃபகத் ஃபசில் மற்றும் நடிகை நஸ்ரியாவுக்கு திருமணமானது. 

தற்போது மீண்டும் இப்போது அஞ்சலி மேனன் இயக்கும் படம் மூலம் சினிமாவுக்கு வருகிறார் நஸ்ரியா. இதை சிறப்பிக்கும் படியாக படத்தில் இடம்பெறும் ஆராரோ பாடலில் வெளியிட்டிருக்கிறார்கள்.

Trending News