விளையாட்டு வீரர்கள் மட்டும் எப்படி ஒரே இரவில் 4 கிலோ எடையை குறைகின்றனர்?

உடல் எடையை குறைப்பது கடினமான விஷயம் என்றாலும், சில விளையாட்டு வீரர்கள் ஒரே இரவில் 2 முதல் 4 கிலோ எடையை குறைகின்றனர். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Aug 12, 2024, 08:08 AM IST
  • 'வெயிட் கட்டிங்' என்றால் என்ன?
  • விளையாட்டு வீரர்கள் எப்படி இதனை செய்கிறார்கள்?
  • இதன்படி உடல் எடையை குறைப்பது நல்லதா?
விளையாட்டு வீரர்கள் மட்டும் எப்படி ஒரே இரவில் 4 கிலோ எடையை குறைகின்றனர்? title=

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இறுதிப்போட்டிக்கு முன்பு அவரது எடை 100 கிராம் அதிகமாக இருந்ததால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உடல் எடையை குறைக்க இரவு முழுவதும் கடுமையான உடற்பயிற்சி செய்துள்ளார். மேலும் தலைமுடியையும் வெட்டியுள்ளார். ஆனால் எதுவும் கடைசியில் பலனளிக்கவில்லை. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் மற்றும் பெண் தடகள வீராங்கனை என்ற வரலாறு படைக்கும் வாய்ப்பு வினேஷ் போகட்டிற்கு இருந்தது. இருப்பினும், இரவு முழுவதும் உடற்பயிற்சி செய்ததால் நீரிழப்பு ஏற்பட்டு வினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்திய மக்களின் கனவு உடைந்தது. 

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், உடல் எடையை குறைப்பது ஒரு பிரச்சனையல்ல என்று கூறியுள்ளார். ஒரு தடகள வீரர் அதிக எடையுடன் இருந்தால், நீராவி குளியல், ஓடுதல் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் அதை சரி செய்யலாம். ஒரு சில கிராம் அதிக எடை கொண்ட ஒருவரை தகுதி நீக்கம் செய்வது நியாயமில்லை, அந்த முடிவுக்கு எதிராக நாம் பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில், எடையில் சிறிய வித்தியாசம் கூட விளையாட்டு வீரர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் உடல் எடையை விரைவாகக் குறைக்க அதிக அழுத்தம் கொடுக்கலாம். உதாரணமாக, 48 கிலோ பிரிவில் போட்டியிட்ட மேரி கோம், ஒரே இரவில் 2 கிலோ எடையை குறைந்தார். 57 கிலோ ​​மல்யுத்தப் பிரிவில் வெண்கலம் வென்ற அமன் செஹ்ராவத், 10 மணி நேரத்திற்குள் 4.5 கிலோவை குறைந்தார்.

மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!

விரைவாக உடல் எடையை குறைப்பது நல்லதா? 

கடுமையான எடை விதிகளை கொண்ட போட்டிக்கு முன்னதாக விளையாட்டு வீரர்கள் சில சமயங்களில் விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டிய சூழல் உள்ளது. குறைந்த உணவை உட்கொள்வதன் மூலமும், உடலில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதன் மூலமும் அவர்கள் இதனை செய்கிறார்கள். போட்டி நடைபெறும் அன்று வீரர்கள் சரியான அளவு எடையை உறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால், அவர்கள் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். உடல் எடையை அடிப்படையாக கொண்டு இருக்கும் விளையாட்டு வீரர்கள், தங்கள் இலக்கு எடையை அடைய போட்டி தொடங்கும் சில வாரங்களுக்கு முன்பு இருந்தே கடுமையான உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். போட்டி நடைபெறும் நாளுக்கு முன்பு ஒருசிலர் சாப்பிடுவதை கூட நிறுத்துகிறார்கள்.

வினேஷ் போகட்

வினேஷ் போகட் மல்யுத்த இறுதி போட்டியில் தனது உடல் எடையை குறைப்பதில் மிகவும் சிரமப்பட்டார். கடைசி கட்டத்தில் வேறு வழியின்றி தலைமுடியை வெட்டுவது தொடங்கி, கம்மியான எடையில் ஆடைகளை அணிய வரை பல விஷயங்களை முயற்சித்துள்ளனர். ஆனால் எதுவும் சரியான எடையை பெற முடியவில்லை. வினேஷ் இறுதி போட்டிகளுக்கு முன்பு எடையை சரியான அளவில் பராமரிக்க குறைவாக சாப்பிட்டு, குறைந்த அளவில் தண்ணீர் குடித்தும் இருந்துள்ளார். இருப்பினும் கடைசியில் 100 கிராம் எடை அதிகரித்துள்ளது. 

அமன் செஹ்ராவத்

மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டியிருந்தது. 57 கிலோ எடை வரம்பை சந்திக்க வெறும் 10 மணி நேரத்தில் 4.5 கிலோ எடையை குறைக்க வேண்டி இருந்தது. இரவு முழுவதும் தொடர் உடற்பயிற்சி, ஹாட் பாத், ஜிம்மில் ஒர்க் அவுட், ஜாக்கிங் என கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டார். இரவு முழுவதும் கடுமையாக உழைத்த அவரால் இறுதியில் எடையை குறைக்க முடிந்தது. தனது எடையை 56.9 என்று குறைத்து போட்டிக்கு தகுதி பெற்றார். இரவு முழுவதும் நீரேற்றமாக இருக்க வெதுவெதுப்பான தண்ணீர், எலுமிச்சை, தேன், காபி போன்றவற்றை குதித்துள்ளார்.

மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News