குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் எந்த உணவு கொடுக்கலாம்

குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் அந்தக் குழந்தைக்கு கொடுக்கும் உணவுகளில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 28, 2022, 08:44 PM IST
  • குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் கவனம் தேவை
  • பிறந்த தினத்திலிருந்து உணவு விஷயத்தில் கவனம் வேண்டும்
  • திட உணவு தயாரிக்க பசும்பாலே போதுமானது
 குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் எந்த உணவு கொடுக்கலாம் title=

அனைவருக்குமே குழந்தை என்றால் பெரும் ப்ரியம். தங்களது குழந்தைகளை அன்போடு மட்டுமின்றி அக்க்றையோடு பார்த்துக்கொள்வதற்கும் பலர் துடிப்பார்கள். ஆனால் அவர்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விஷயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று. 

முதல் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு பற்றவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தியுங்கள். அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை கூறுவார்.

மேலும் படிக்க | Hemochromatosis: அளவிற்கு அதிகமான இரும்பு சத்து உயிருக்கு எமனாகலாம்; எச்சரிக்கும் நிபுணர்கள்!

பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது வழக்கம். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும். திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. 

Baby

பசும்பாலை ஒரு வயதிற்கு மேல்தான் கொடுக்க வேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர் உடல்நல ஆரோக்கியம் பற்றி தெரிந்தவர்கள். திட உணவுக்கு சிறந்தது பசும்பால்தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

மேலும் படிக்க | Quick Recipes: சட்டென்று தயார் செய்ய சில சத்தான & சுவையான Lunch Box உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News