ஆவணி அவிட்டம் என்றால் என்ன- ஏன் பூணூலைப் புதுப்பிக்கப்படுகிறது

ஆவணி மாத பௌர்ணமியை யொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 22, 2021, 08:03 AM IST
ஆவணி அவிட்டம் என்றால் என்ன- ஏன் பூணூலைப் புதுப்பிக்கப்படுகிறது title=

ஆவணி மாத பௌர்ணமியை யொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நாளில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மற்றும் உபநயணம் செய்துக்கொண்ட பிராமணர்கள் ஆற்றங்கரைகளில் அல்லது குளக்கரைகளில் தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்துக்கொள்வர்.

திருமணம் ஆகாதவர் ஒரு ஒரு பூணூல், திருமணம் ஆனவர் இரண்டு பூணூலையும், திருமணம் ஆகி தந்தையை இழந்தவர்கள் மூன்று பூணூலையும் அணிந்து கொள்வர். அதன்படி இன்று ஆவணி அவிட்டத்தையொட்டி (Avani Avittam) உபநயணம் எனப்படும் பூணூல் மாற்றி தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

ALSO READ | ஆவணி அவிட்டம் பூணுால் அணிதல்!

இது தினத்தை ரிக், யசுர் வேதிகள் கொண்டாடும் தினமாகும். சாம வேதிகள் விநாயகர் சதுர்த்தி அன்று கொண்டாடுவார்கள். இது ஒரு கூட்டு வழிபாடாகும். இந்த அற்புத திருநாளை ஆற்றங்கரை, குளக்கரையிலோ குளித்து  ஆவணி அவிட்டம் விரதம் தொடங்குவர். கணபதி பூஜையுடன் தொடங்கும் இந்த விரதம், புண்யாவாகனம் செய்த பின்னர் பஞ்சகவயம் அருந்தி உடல், மனம் மற்றும் இருப்பிடத்தைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

தந்தை இல்லாதவர்கள் தங்கள் மூதாதையர்களை நினைத்து எள்ளும், அரிசியும் நீரில் கொடுத்து தர்ப்பணம் செய்வது வழக்கம். பின்னர் தங்களின் பூணூலை புதுப்பித்துக் கொண்டு வேதங்களைப் படிக்கத் தொடங்கலாம். சமஸ்கிருதத்தில் இதற்கு உபாகர்ம என்று பெயர்.

பூணூல் வகைகள்:
* கள்ளப்பூணூல்
* பிரம்மச்சாரி பூணூல்
* கிரஹஸ்தர் பூணூல்
* சஷ்டிஅப்த பூர்த்தி பூணூல்

ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணிந்து கொண்டவர்களுக்கு எவ்வித துன்பங்களும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.

ALSO READ | Avani Avittam Panchangam: இன்றைய பஞ்சாங்கம் 22 ஆகஸ்ட் 2021

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News