உற்பாதங்களும், அபசகுனங்களும் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

பயங்கரமான பூகம்பங்கள், புயல் ஏற்பட்டால் மூன்று மாதத்திற்குள் இரண்டு கிரகணங்கள் ஏற்பட்டால், தவளை பயங்கரமாக சுத்தினால், மஞ்சளாக மழை செய்தால் ராஜயம் நாசமடையும் இதற்கெல்லாம் பரிகாரங்கள் உள்ளன..!

Last Updated : Nov 22, 2020, 08:13 AM IST
உற்பாதங்களும், அபசகுனங்களும் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்? title=

பயங்கரமான பூகம்பங்கள், புயல் ஏற்பட்டால் மூன்று மாதத்திற்குள் இரண்டு கிரகணங்கள் ஏற்பட்டால், தவளை பயங்கரமாக சுத்தினால், மஞ்சளாக மழை செய்தால் ராஜயம் நாசமடையும் இதற்கெல்லாம் பரிகாரங்கள் உள்ளன..!

உற்பாதங்கள் அதாவது இடைஞ்சல்கள் மூன்று வகைப்படும். தெய்வீகமாய் ஏற்படுபவை “திவ்ய’ எனப்படும். பூமியின் சுழற்சியால், இயற்கை பாதிப்பால் ஏற்படுபவை அந்தரிக்ஷம் எனப்படும், கிரகம், நட்சத்திரம் ஆகியவற்றால் எற்படும் பயம், நடக்கக்கூடாதது நடந்து விடுமோ என்ற சந்தேகம் இவையெல்லாம் திவ்யம். எரி நட்சத்திரப் பாதை திசைகளின் விபரீத சுழற்சியால் மண்டல்ஙகள் வானில் காணுதல், சூரிய சந்திரங்களின் ஒளியில் மாற்றங்கள், ஆகாயத்தில் கந்தர்வ நகரம் காணுதல், அதீத மழை, அல்லது மழை இன்மை இவைகள் எல்லாம் அந்தரிஷம். நீர் நிலைகள், மரங்கள், பூகம்பம், மியி அதிர்வு, எரிமலை ஆகியவை பௌமம். அதாவது பூமியின் உத்பாதம் என்று கூறப்படுகிறது.

திவ்ய, அந்தரிக்ஷ உற்பாதங்களின் விளைவு ஒரு வார காலம் நீடிக்கும். இதற்கு பரிகாரமாக வேள்வி செய்யலாம். அப்படி செய்யாவிட்டால் உற்பாதங்களின் விளைவு நெடுங்காலம் நீடிக்கும். பூமியில் தோன்றும் ரத்த பெருக்கு, அகஸ்மாத்தாக ஏற்படும் மின்னல், சமுத்திரத்திற்கு அடியில் ஏற்படும் நெருப்பு (வடவாமுகாக்னி) திடீர் எழுச்சி, சர்ப்பங்கள் மேலேறி வருதல், இவைஎல்லாம் துர்நிமித்தங்கள் மேகத்திலிருந்து விழும் மழை கற்பாறைகள் மீது கீஙழ இறங்கி, ஒரு வாரத்திற்குள்ளாகவே பிராணிகளுக்கு நஷ்டத்தை கொடுக்கும்.

ஒரே ராசியில் சனி, செவ்வாய், ராகு, சூரியன் பாவகிரகங்களாக சஞ்சரித்தால் திடீரென அசம்பாவிதம் நடைபெறும். மக்கள் சமுதாயமே நலிவடையும். சூரியன் சில காலம் தொடர்ந்து தெரியாவிட்டால் அல்லது புகையுடன் தெரிந்தால் அலு“லது வானத்தில் தூமகேது, எரி நட்சத்திரம் தெரிந்து விழுந்தால் அல்ஙது நிலநடுக்கம்அடிக்கடி நிகழ்நாத்ல ராஜாவின் பிறந்த நாள் அன்று வானில் இந்திர தனுஷ் (வானில்) தென்பட்டால் இவை யாவும் துர்நிமித்தங்களாக கருதப்படும்.

பயங்கரமான பூகம்பங்கள், புயல் ஏற்பட்டால் மூன்று மாதத்திற்குள் இரண்டு கிரகணங்கள் ஏற்பட்டால், தவளை பயங்கரமாக சுத்தினால், மஞ்சளாக மழை செய்தால் ராஜயம் நாசமடையும் இதற்கெல்லாம் பரிகாரங்கள் உள்ளன.

ALSO READ | திருமணத்தின் போது அக்னியை சுற்றி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?

அரசன் புறப்படும்பொழுது அண்டங்காக்கை போன்ற தீமையை குறிக்கும் பறவைகள் கொடியில் வந்து அமரக்கூடாது. அரசன் பறப்படும் பொழுது குதிரைகளின் காலடி தறக்கூடாது. அணிந்துள்ள ஆயுதங்கள் நழுவக்கூடாது. குடைகள் சாயக்கூடாது.

பறவை சகுனங்கள் நல்லவை – தீயவை காட்டுவதில் ஆறு விஷயங்கள் உள்ளன. நேரம், திசை, இடம் செய்யும் சத்தம், சத்த இயல்பு, சத்தம் செய்யும் பறவை என்று ஆறு வகைப்படும். ஒருவன் புறப்படும் பொழுது மான் வந்து வெளியே குதித்து விட்டு சென்றால் மரணம் வருவதை குறிப்பதாகும். கபிஞ்சலம் என்ற பறவையை பார்த்தால் துரதிஷ்டத்தை குறிக்கும்.

புறப்படும் பொழுது மயிலை கண்டால் நன்மை ஆனால் மயில் கிரிக் என்று கத்தினால் கெடுதல், தவறை கண்டபடி கத்தினால் தீமை, பசு இயற்கையான உணவை விட்டு அசுத்தங்களை தின்றால் கர்ப்பம் கலையும்.

வில்வ மரத்தில் ஆந்தையோ, கழுகோ உட்காருவது கெடுதல். அது துர்நிமித்தமாகும்.

ஒவ்வொரு கிரகத்துக்கும் துர்நிமித்தங்களை மாற்றியமைக்கவோ அல்லது தீவிரத்தை குறைக்கவோ ஆற்றல் உண்டு. அதற்காக வேள்வி ஆகுதிகள் செய்ய வேண்டும். அங்காரகனையும் (செவ்வாய்) புதனையும் மந்திரங்களை சொல்லி திருப்திப்படுத்த வேண்டும். சூரியன் சந்திரனையும் மந்திரத்தை சொல்லி திருப்திப்படுத்த வேண்டும். ஆகுதி செய்யவேண்டும். இதைப்போல மற்ற கிரகங்களையும் திருப்திப்படுத்த வேண்டும்.

Trending News